தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ தாவரவியல் பூங்காவில் உள்ளிருப்பு போராட்டம்

 தாவரவியல் பூங்காவில் உள்ளிருப்பு போராட்டம்

 தாவரவியல் பூங்காவில் உள்ளிருப்பு போராட்டம்


ADDED : மார் 13, 2026 06:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 13, 2026 06:36 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஊட்டி: நீலகிரி மாவட்ட தோட்டக்கலை பண்ணை மற்றும் பூங்கா ஊழியர்கள், கோரிக்கைகளை வலியுறுத்தி மூன்றாம் நாளாக, ஊட்டி தாவரவியல் பூங்காவில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடு பட்டனர்.

மாவட்ட தோட்டக்கலை துறை பண்ணை மற்றும் பூங்கா சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில், 'சிறப்பு காலமுறை ஊதியத்தை காலமுறை ஊதியமாக மாற்றி வழங்க வேண்டும்; 10 ஆண்டுக்கு மேலாக பணிபுரிவோரை நிரந்தரம் செய்ய வேண்டும்; தினக்கூலி பணியாளர்களுக்கு கலெக்டர் தீர்மானித்த ஊதியம் வழங்க வேண்டும்,' உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஊட்டியில் மூன்றாம் நாளாக தொடர் போராட்டம் நடந்து வருகிறது.

நேற்று தாவரவியல் பூங்காவில் உள்ளிருப்பு போராட்டம் நடந்தது. இந்நிலையில், சங்க தலைவர் மோகன் தலைமையில் நிர்வாகிகள் சிலர், உயர் அதிகாரிகளிடம் பேச்சு வார்த்தை நடத்த சென்னை சென்றுள்ளனர்.

போராட்டத்தால் பூங்காக்களில் கோடை சீசன் பணிகள் பாதிக்கப்பட்டது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us