/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கூடலுார்- சென்னை இடையே படுக்கை வசதியுடன் பஸ் இயக்கம்
/
கூடலுார்- சென்னை இடையே படுக்கை வசதியுடன் பஸ் இயக்கம்
கூடலுார்- சென்னை இடையே படுக்கை வசதியுடன் பஸ் இயக்கம்
கூடலுார்- சென்னை இடையே படுக்கை வசதியுடன் பஸ் இயக்கம்
ADDED : அக் 08, 2024 12:11 AM

கூடலுார் : கூடலுார்- சென்னை இடையே படுக்கை மற்றும் இருக்கை வசதியுடன் கூடிய அரசு சொகுசு பஸ் இயக்கப்படுவதை பயணிகள் வரவேற்றுள்ளனர்.
கூடலுாரில் இருந்து அரசு விரைவு போக்குவரத்து கழகம் சார்பில், சென்னை, கன்னியாகுமாரி, செங்கோட்டை பகுதிகளுக்கு நேரடியாக சொகுசு பஸ் இயக்கப்படுகிறது. 'இந்த பஸ்களை படுக்கை மற்றும் இருக்கை வசதியுடன் கூடிய பஸ்களாக மாற்ற வேண்டும்,' என, பயணிகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில், கடந்த மாதம் கூடலுார் -செங்கோட்டை புதிய சொகுசு பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால், சென்னைக்கு புதிய பஸ்கள் இயக்காததால், பயணிகள் அதிருப்தி அடைந்தனர்.
இதுகுறித்து, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியிடப்பட்டது
இந்நிலையில், கூடலுார்- சென்னை இடையே படுக்கை மற்றும் இருக்கை வசதியுடன் கூடிய புதிய சொகுசு பஸ் இயக்கம் துவங்கியது. இதனால், உள்ளூர் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.