/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீலகிரி பசுந்தேயிலை விலை வீழ்ச்சி தொடர்வதால் சிறு விவசாயிகள் பாதிப்பு! கிலோவுக்கு ரூ.14 மட்டுமே கிடைப்பதால் சிக்கல்
/
நீலகிரி பசுந்தேயிலை விலை வீழ்ச்சி தொடர்வதால் சிறு விவசாயிகள் பாதிப்பு! கிலோவுக்கு ரூ.14 மட்டுமே கிடைப்பதால் சிக்கல்
நீலகிரி பசுந்தேயிலை விலை வீழ்ச்சி தொடர்வதால் சிறு விவசாயிகள் பாதிப்பு! கிலோவுக்கு ரூ.14 மட்டுமே கிடைப்பதால் சிக்கல்
நீலகிரி பசுந்தேயிலை விலை வீழ்ச்சி தொடர்வதால் சிறு விவசாயிகள் பாதிப்பு! கிலோவுக்கு ரூ.14 மட்டுமே கிடைப்பதால் சிக்கல்
ADDED : செப் 04, 2025 10:35 PM

குன்னுார்; நீலகிரி பசுநதேயிலைக்கு கடும் விலை வீழ்ச்சி ஏற்பட்டு வருவதால், மலை மாவட்ட சிறு விவசாயிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில், 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட சிறு தேயிலை விவசாயிகள் உள்ளனர். இவர்கள் தங்கள் தோட்டங்களில் பறிக்கும் பசுந்தேயிலையை, 285 தொழிற்சாலைகளுக்கு வழங்குகின்றனர். தேயலை எஸ்டேட் நிறுவனங்களில் உற்பத்தி செய்யப்படுகிறது.
இங்கு உற்பத்தி செய்யப்படும் தேயிலை துாள் குன்னுார் 'டீசர்வ்', கோவை ஏல மையங்களில் ஏலம் விடப்பட்டு நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பப்பட்டு வருகிறது. நடப்பாண்டின் துவக்கத்தில் தேயிலை துாள் ஏலத்தில், சராசரி விலை கிலோவிற்கு, 128 ரூபாய் கிடைத்த நிலையில் தொடர் வீழ்ச்சி ஏற்பட்டு, தற்போது, 92.80 ரூபாய் என விலை சரிந்துள்ளது.
பசுந்தேயிலை விலை வீழ்ச்சி இதனால், சிறு தேயிலை தொழிற்சாலைகள் மற்றும் கூட்டுறவு தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்த தேயிலை தூள் விலைக்கு ஏற்ப, அந்தந்த மாதத்தில் நடக்கும் ஏலத்தின் அடிப்படையில், அதே மாதத்திற்கான பசுந்தேயிலை விலையை, குன்னுரில் உள்ள தேயிலை வாரியம், நிர்ணயம் செய்து வரும் நிலையில், பசுந்தேயிலை விலையும் வீழ்ச்சி அடைந்து வருகிறது.
கடந்த ஜன.,மாதம் பசுந்தேயிலை கிலோ, 20.21 ரூபாய் என இருந்த நிலையில், ஜூலை மாதத்தில், கிலோ,14.71 ரூபாய் என சரிந்துள்ளது. ஏற்கனவே விலை வீழ்ச்சியால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், இங்கு உற்பத்தியாகும் தேயிலைக்கு அடிப்படை ஆதார விலையை விவசாயிகள் கோரி வருகின்றனர்.
பசுந்தேயிலைக்கு, அதன் உற்பத்தி செலவை கூட ஈடுசெய்ய இயலாத, குறைந்த விலையை பெற்று வருவதால் பசுந்தேயிலை கிலோவிற்கு, 40 ரூபாய் நிர்ணயம் செய்ய வலியுறுத்துகின்றனர்.
மத்திய அமைச்சரை சந்தித்த விவசாயிகள் இந்நிலையில், நீலகிரி மாவட்டத்திலிருந்து சிறு, குறு தேயிலை விவசாயிகள், சங்க பிரதிநிதிகள், மத்திய இணை அமைச்சர் டாக்டர் முருகன் ஏற்பாட்டில், டில்லி சென்று, வணிகம் மற்றும் தொழிற்சாலை துறை மத்திய இணையமைச்சர் ஜித்தின் பிரசாதாவை சந்தித்து, தேயிலைக்கு அடிப்படை ஆதார விலை மற்றும் நீண்டகால கோரிக்கைகளை முன் வைத்துள்ளனர். மத்திய அரசு மனம் வைத்தால் மட்டுமே தேயிலை விவசாயிகளை காக்க முடியும் என்ற சூழ்நிலை நிலவி வருகிறது.
விவசாய சங்க நிர்வாகிகள் கூறுகையில், 'நீலகிரி மாவட்டத்தில் இருந்து, ஒய்.பி.ஏ., நெலிகோலு, நாக்குபெட்டா, தொதநாடு, மேற்குநாடு, பொரங்காடு, குந்தசீமை போன்றவை சார்பில், 9 விவசாய சங்க நிர்வாகிகள், சிறு, குறு விவசாயிகள் இணைந்து, தேயிலைக்கு அடிப்படை ஆதார விலை கோரி உட்பட பல கோரிக்கைகளை, மத்திய அரசிடம் வைத்தோம்.
விரைவில் அதற்கான தீர்வுகளை ஏற்படுத்தி கொடுப்பதாக அமைச்சர் உறுதியளித்தார்,' என்றனர்.