/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சி: கவலையில் சிறு விவசாயிகள்
/
சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சி: கவலையில் சிறு விவசாயிகள்
சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சி: கவலையில் சிறு விவசாயிகள்
சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சி: கவலையில் சிறு விவசாயிகள்
ADDED : பிப் 25, 2024 11:08 PM

கூடலுார்;சின்ன வெங்காயம் விலை வீழ்ச்சியால், மசினகுடி விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கூடலுார், மசினகுடி பகுதியில் விளையும் சின்ன வெங்காயத்துக்கு, கடந்த ஆண்டு அதிக விலை கிடைத்தது.
அதேபோன்று நடப்பு ஆண்டு, அதிக விலை கிடைக்கும் என்ற நம்பிக்கையில், முதுமலை, மசினகுடி பகுதி விவசாயிகள் சிலர், சின்ன வெங்காயத்தை பயிரிட்டுள்ளனர். கடந்த மாதம் கிலோவுக்கு, 60 ரூபாய் விலை கிடைத்ததால் விவசாயிகள் மகிழ்ச்சியில் இருந்தனர். தற்போது, அறுவடை துவங்கி உள்ள நிலையில், சின்ன வெங்காயத்தின் விலை, 25 ரூபாயாக, குறைவான விலை கிடைப்பதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
விவசாயிகள் கூறுகையில், 'கடந்த ஆண்டை போல நடப்பாண்டும் நல்ல விலை கிடைக்கும் என, எதிர்பார்த்து, சின்ன வெங்காயம் பயிரிட்டு அறுவடை துவங்கியுள்ளோம். திடீரென விலை வீழ்ச்சி ஏற்பட்டதால், நஷ்டத்தை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது.
ஏற்றுமதிக்கு தடை காரணமாகவே, சராசரியாக விலை கூட கிடைக்காமல் நஷ்டத்தை ஏற்படுத்தி உள்ளது. எனவே, விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்படாத வகையில், சின்ன வெங்காயத்துக்கு விலை கிடைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என்றனர்.

