/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மேரக்காய் விளைச்சல் அதிகரிப்பு; விலை வீழ்ச்சி; கவலையில் சிறு விவசாயிகள்

ADDED : பிப் 20, 2025 09:51 PM

கூடலுார் ; கூடலுாரில் சற்று உயர்ந்திருந்த மேரக்காயின் விலை மீண்டும் வீழ்ச்சி அடைந்துள்ளதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கூடலுார் பகுதி வயல்களில் பருவமழை காலத்தில் நெல் விவசாயம்; கோடையில் போதிய பாசன வசதி இல்லாததால், விவசாயிகள் காய்கறி விவசாயம் செய்து வருகின்றனர்.
இங்கு, பாகற்காய், பீன்ஸ், கத்தரிக்காய், தட்டப்பயறு, மேரக்காய் விவசாயத்திலும் பலர் ஈடுபட்டு வருகின்றனர். நடப்பு ஆண்டு, அதிக விலை கிடைக்கும் என்ற எதிர்பார்ப்புடன், மேரக்காய் அதிகளவில் பயிரிட்டுள்ளனர். ஆனால், எதிர்பார்த்த விடை கிடைக்கவில்லை. கடந்த வாரம், இதன் விலை சற்று உயர்ந்து, கிலோ, 10 ரூபாய் வரை கிடைத்ததால் விவசாயிகள் சற்று நிம்மதி அடைந்தனர். ஆனால், கடந்த சில நாட்களாக விலை மீண்டும் வீழ்ச்சியடைந்து, கிலோவுக்கு, 5 ரூபாய் கிடைப்பதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
விவசாயி மோகன் கூறுகையில், ''மேரக்காய் விளைச்சல் அதிகம் இருந்தும், கிலோ, 5 ரூபாய் வரை மட்டுமே விற்கப்படுகிறது. இதனால், நஷ்டத்தை சந்தித்து வருகிறோம். நஷ்டத்தை ஈடு செய்ய அரசு மானிய உதவி வழங்க வேண்டும்,'' என்றார்.