/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
இணைப்பு உரங்களை வாங்க சிறு விவசாயிகளை கட்டாயப்படுத்த கூடாது! கேட்பதை மட்டும் தரத்துடன் கொடுக்க உத்தரவு
/
இணைப்பு உரங்களை வாங்க சிறு விவசாயிகளை கட்டாயப்படுத்த கூடாது! கேட்பதை மட்டும் தரத்துடன் கொடுக்க உத்தரவு
இணைப்பு உரங்களை வாங்க சிறு விவசாயிகளை கட்டாயப்படுத்த கூடாது! கேட்பதை மட்டும் தரத்துடன் கொடுக்க உத்தரவு
இணைப்பு உரங்களை வாங்க சிறு விவசாயிகளை கட்டாயப்படுத்த கூடாது! கேட்பதை மட்டும் தரத்துடன் கொடுக்க உத்தரவு
ADDED : அக் 01, 2024 10:52 PM

ஊட்டி : 'சிறு விவசாயிகள் கேட்கும் உரத்தை மட்டும் தரத்துடன் கொடுப்பதுடன், இணைப்பு உரங்களை வாங்க கட்டாயப்படுத்த கூடாது,' என, உரம் மற்றும் பூச்சிகொல்லி மருந்து கடைகள் விற்பனையாளர்களுக்கு வேளாண் துறை உத்தரவிட்டுள்ளது.
மலை மாவட்டமான. நீலகிரியில் தேயிலைக்கு அடுத்தப்படியாக மலை காய்கறி விவசாயம் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக, சில ஆண்டுகளாக கால நிலை மாற்றத்தால் மலை காய்கறி விவசாய தொழிலில் பல்வேறு பாதிப்புகளை விவசாயிகள் சந்தித்து வருகின்றனர். தோட்டக்கலை துறை மூலம் பல்வேறு பயிர் பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு அறிவுரை வழங்கப்பட்டு வருகிறது.
செயல்படும் 300 உரக்கடைகள்
'ஊட்டி, குன்னுார், கோத்தகிரி, குந்தா, கூடலுார் மற்றும் பந்தலுார் உள்ளிட்ட தாலுகா பகுதிகளில், கூட்டுறவு சங்கம் மற்றும் தனியார்,' என, 300 உரக்கடைகள் செயல்பட்டு வருகின்றன. சிறு விவசாயிகள் தேயிலை, மலை காய்கறி பயிர்களுக்கு தேவையான உரங்களை மாவட்டத்தில் உள்ள விற்பனை நிலையங்கள் மூலம் பெறுகின்றனர். அதில், யூரியா, டி.ஏ.பி., பொட்டாஷ், கலப்பு உரம் உள்ளிட்ட உரங்களை பயன்படுத்தி வருகின்றனர்.
அதில், விவசாயிகள் பயன்படுத்தும் உரத்தின் தரம் மற்றும் அரசு நிர்ணயித்த விலைக்கு விற்பனை செய்வது குறித்து உறுதி செய்வது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை வேளாண் துறை தரக்கட்டுப்பாடு மூலம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இத்துறையினர் அவ்வப்போது உரங்களை மாதிரிக்கு எடுத்து பரிசோதித்து தரமற்ற உரங்கள் வினியோகம் கண்டறியப்பட்டால், சம்மந்தப்பட்ட உரக்கடைகள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
நடவடிக்கை பாயும்
குறிப்பாக, மலை காய்கறி விவசாயத்திற்கு தேவைப்படும் உரம், பூச்சிக்கொல்லி மருந்துகளை விவசாயிகள் தேவைக்கேற்ப பயன்படுத்தி வருகின்றனர். உரம், பூச்சி கொல்லி மருந்துகளை அந்தந்த பகுதியில் உள்ள கூட்டுறவு மற்றும் தனியார் உரக்கடைகள் மூலம் விவசாயிகள் வாங்கி பயன்படுத்தி வருகின்றனர். சமீபத்தில் வேளாண் துறை அலுவலகத்தில், உரம் மற்றும் பூச்சிகொல்லி மருந்து கடைகளின் விற்பனையாளர்களை அழைத்து, ஆய்வு கூட்டம் நடத்தி அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளது.
அதில், 'விவசாயிகள் உரம் வாங்க சம்மந்தப்பட்ட உரக்கடைக்கு வரும் போது, கேட்கும் உரங்களை மட்டும் தரத்துடன் கொடுக்க வேண்டும்; எக்காரணத்தை கொண்டு இணைப்பு உரங்களை வாங்க கட்டாய படுத்தக்கூடாது; விற்பனை உரங்களில் இணைக்கப்படாத உரங்களை இருப்பில் வைத்து விற்பனை செய்யக்கூடாது; மீறினால் உரக்கட்டுப்பாட்டு ஆணையின் படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும்; அனுமதி வழங்கப்பட்ட உரங்களை மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்.மேலும், டி.ஏ.பி., உரத் தேவையை ஈடுகட்டும் வகையில் அதன் மாற்று உரமான சூப்பர் பாஸ்பேட் உரம் மற்றும் கூட்டு உரங்கள் ஆகியவற்றின் பயன்களை விவசாயிகளுக்கு எடுத்துரைத்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அதிக அளவில் இருப்பு வைத்து விவசாயிகளுக்கு வழங்கிட நடவடிக்கை எடுக்க வேண்டும்,'என, அறிவுறுத்தப்பட்டுள்ளது.