/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தேயிலையில் கொப்புள நோய் கவலையில் சிறு விவசாயிகள்
/
தேயிலையில் கொப்புள நோய் கவலையில் சிறு விவசாயிகள்
ADDED : ஜன 09, 2025 10:42 PM

கோத்தகிரி, ; கோத்தகிரி பகுதியில் தேயிலை செடிகளில் கொப்புள நோய் தாக்கி வருவதால், விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில், அதிக பரப்பளவில் தேயிலை விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. விவசாயிகள் மற்றும் தொழிலாளர்களின் பொருளாதாரம், இத்தொழிலை நம்பியுள்ளது.
ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு தற்போது சராசரியாக, 24 ரூபாய் வரை விலை கிடைத்து வருகிறது. இதனால், விவசாயிகள் ஓரளவு ஆறுதல் அடைந்துள்ளனர்.
மாவட்டத்தில், பெரும்பாலான பகுதிகளில் ஒரு வாரமாக குறைந்தபட்ச வெப்பநிலை தொடர்கிறது. அத்துடன் அதிகாலை நேரங்களில், பனிப்பொழிவும் இருந்து வருகிறது.
இந்நிலையில், அவ்வப்போது கடும் குளிருடன் மேகமூட்டமான காலநிலை நிலவுகிறது. இதனால், தேயிலை செடிகளில், கொப்புள நோய் தாக்கி வருகிறது. இதே நிலை நீடிக்கும் பட்சத்தில், பசுந்தேயிலை மகசூல் வெகுவாக குறைந்து, விவசாயிகளுக்கு இழப்பு அதிகரிக்க வாய்ப்புள்ளது.