ADDED : ஆக 20, 2026 02:40 PM
குன்னுார்: குன்னுாரில் போதுமான மழை பெய்யாததால் மலை தோட்ட காய்கறிகள் பாதித்து விவசாயிகளுக்கு நஷ்டம் ஏற்பட்டு வருகிறது.
நீலகிரி மாவட்டத்தில் உருளை கிழங்கு, கேரட், பீட்ரூட், முட்டைக்கோஸ், பூகோஸ் உள்ளிட்ட பல்வேறு தோட்ட காய்கறிகள் பயிரிடப்படுகிறது. இந்த ஆண்டு போதுமான மழை பெய்யாததால் மலை தோட்ட காய்கறி செடிகள் காய்ந்து விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. ஊட்டி பூண்டு செடிகள் காய்ந்து விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, குன்னுாரில் பந்துமை, இளித்தொரை உட்பட மலை அடிவார பகுதிகளில் மழை இல்லாததால் செடிகள் காய்ந்துள்ளன.
விவசாயி பிரகாஷ் கூறுகையில்,‘‘அதிக அளவில் விலை கொடுத்து விதைகள், உரங்கள் வாங்கி பூண்டு உள்ளிட்ட மலை காய்கறிகள் பயிர் செய்த போதும், தண்ணீர் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கான விலையை குறைக்க அரசு முன் வருவதுடன் நஷ்டங்களுக்கு நிவாரணம் வழங்க வேண்டும்,’’ என்றார்.
