/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
புகையில்லா போகி பண்டிகை :விழிப்புணர்வு ஊர்வலம்
/
புகையில்லா போகி பண்டிகை :விழிப்புணர்வு ஊர்வலம்
ADDED : ஜன 12, 2024 11:27 PM
கூடலுார்:கூடலூரில் புகையில்லா போகி பண்டிகை கொண்டாட வலியுறுத்தி விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது.
கூடலுார் நகராட்சி மற்றும் சிவாலய சமாரிட்டன் அறக்கட்டளை சார்பில், புகையில்லா பண்டிகையை கொண்டாட வலியுறுத்தி, கூடலுார் நகராட்சி அலுவலகம் அருகே, விழிப்புணர்வு ஊர்வலம் தூங்கியது. ஊர்வலத்தை வண்டிபேட்டை ஊராட்சி நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சரஸ்வதி துவக்கி வைத்தார். அதில், புகையில்லா போகி பண்டிகை கொண்டாட வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டது.
ஊர்வலம் ஊட்டி - மைசூரு தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்று, புதிய பஸ் ஸ்டாண்ட் அருகே நிறைவு பெற்றது. ஊர்வலத்தில், நகராட்சி ஊழியர்கள், சேவாலயா சமாரிட்டன் இலவச மருத்துவமனை ஊழியர்கள், பள்ளி மாணவர்கள் பங்கேற்றனர்.