ADDED : செப் 07, 2026 03:38 AM

அ நிறம் | அளவு
குன்னூர்: குன்னூர் உட்காக் சாலையில் குடியிருப்புக்குள் புகுந்த பாம்பை தீயணைப்பு துறையினர் பிடித்தனர்.
குன்னூர் உட்காக் சாலையில் உள்ள தனியார் கண் மருத்துவமனை அருகே அமைந்துள்ள குடியிருப்பில் பாம்பு ஒன்று புகுந்தது.
குடியிருப்பு வளாகத்திற்குள் பாம்பு நடமாட்டத்தை கண்டு உடனடியாக குன்னூர் தீயணைப்பு மற்றும் மீட்பு துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், பதுங்கியிருந்த பாம்பை பிடித்தனர். பிடிபட்ட பாம்பு போலி கட்டுவீரியன் என அழைக்கப்படும் வெள்ளிகோல் வரையன், என்பதும், விஷமில்லாத பாம்பு எனவும் தெரியவந்தது.
இதனை தீயணைப்பு துறையினர் வனப்பகுதிக்குள் கொண்டு சென்று விட்டனர்.
