ADDED : ஏப் 05, 2026 11:11 PM

அ நிறம் | அளவு
குன்னூர்:ஊட்டி மலை ரயில் இன்ஜினில் பாம்பு புகுந்ததால் பயணியர் அத்துடன் பயணித்தனர்.
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னூருக்கு எக்ஸ் கிளாஸ் இன்ஜின் கொண்ட மலை ரயில் இயக்கப்பட்டது.
இந்த ரயில் 5வது டனல் அருகே வந்தபோது இன்ஜினில் புகுந்த கண்ணாடி விரியன் பாம்பு மேற்கூரை பகுதிக்குள் சென்றது.
அவ்வப்போது தலையை மட்டும் வெளியே நீட்டிக் கொண்டிருந்தது.
இதனால், அச்சத்துடன் ரயில் பைலட்கள் குன்னூர் வரை இயக்கினர். வனத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குன்னுார் வந்தடைந்த மலை ரயில் இன்ஜின் மேற்கூரை முழுவதும் பிரித்து சோதனை செய்தனர். பாம்பு சிக்கவில்லை.
