/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சேரம்பாடி சுங்கம் பகுதியில் பொக்லைனில் மண் அகற்றம்
/
சேரம்பாடி சுங்கம் பகுதியில் பொக்லைனில் மண் அகற்றம்
சேரம்பாடி சுங்கம் பகுதியில் பொக்லைனில் மண் அகற்றம்
சேரம்பாடி சுங்கம் பகுதியில் பொக்லைனில் மண் அகற்றம்
ADDED : மே 01, 2025 04:42 AM
பந்தலுார் : பந்தலுார் அருகே சேரம்பாடி சுங்கம் பகுதியில் மத வழிபாட்டு சபை செயல்பட்டு வருகிறது.
மேடுபாங்கான பகுதியில் அமைந்துள்ள, சபை கட்டடத்தை ஒட்டி மண் சரிவு ஏற்படுவதாக கூறி, மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவுடன் பொக்லைனில் இடித்து சமன்படுத்தும் பணி நேற்று மேற்கொள்ளப்பட்டது.
இதனை ஒட்டி வருவாய் துறைக்கு சொந்தமான நிலம் உள்ள நிலையில்,'மண் அகற்றும் நிலம் குறித்து ஆய்வு செய்து அதன் பின்னர் மண் அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என, கிராம மக்கள் வலியுறுத்தினர். தொடர்ந்து, வி.ஏ.ஓ., யுவராஜ், மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் சுரேஷ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அதிகாரிகள் கூறுகையில், 'நில அளவையரை கொண்டு, நில அளவை செய்த பின்னர் மண் அகற்றும் பணி மேற்கொள்ள வேண்டும். அதுவரை பணியை நிறுத்தி வைக்க வேண்டும்,' என்றனர். இதை தொடர்ந்து, மண் அகற்றும் பணி தற்காலிகமாக நிறுத்தப்பட்டது.