/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மர போஸ்டுகளில் சோலார் விளக்குகள்: மக்கள் அதிருப்தி பழங்குடியின மக்கள் அதிருப்தி

ADDED : அக் 31, 2024 09:14 PM

பந்தலுார் ; பந்தலுார் அருகே மங்கரை பழங்குடியின கிராமத்தில், மர போஸ்டுகளில் தெருவிளக்கு பொருத்தப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
சேரங்கோடு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் மங்கரை பழங்குடியின கிராமம் அமைந்துள்ளது. இந்த பகுதியில் தெரு விளக்கு வசதி இல்லாத நிலையில், இரவு நேரங்களில் சிறுத்தை மற்றும் காட்டுப் பன்றிகள் நடமாட்டத்தால் பழங்குடியின மக்கள், வெளியிடங்களுக்கு சென்று வருவதில் சிக்கல் ஏற்பட்டது.
தொடர்ந்து ஊராட்சி நிர்வாகத்திடம் தங்கள் கிராமத்தில், தெரு விளக்கு அமைக்க கோரிக்கை விடுத்தனர். அப்பகுதியில் சோலார் தெரு விளக்கு அமைக்க, இரும்பு துாண்கள் இல்லாத நிலையில், மர போஸ்டுகளில் சோலார் தெரு விளக்கு பொருத்தி உள்ளனர்.
மக்களின் அடிப்படை வசதிகள் நிறைவேற்றுவதில் பல்வேறு புதிய யுக்திகளை, அரசு செயல்படுத்தி வரும் நிலையில், பழங்காலத்தை நினைவு கூறும் வகையில், மர போஸ்டுகளில் தெரு விளக்குகள் பொருத்தப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் மழை அல்லது பலத்த காற்று வீசினால் இந்த போஸ்டுகள் அடியோடு சாய்ந்து விடும் நிலையில் பல்வேறு பாதிப்புகளும் ஏற்படும்.
எனவே, இந்த பகுதிகளை அதிகாரிகள் ஆய்வு செய்து, தரமான இரும்பு கம்பத்தில் தெரு விளக்கு பொருத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.