/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சோலுார் மட்டம் பகுதி விழிப்புணர்வு கருத்தரங்கு
/
சோலுார் மட்டம் பகுதி விழிப்புணர்வு கருத்தரங்கு
ADDED : மார் 28, 2025 03:35 AM
கோத்தகிரி: கோத்தகிரி சோலுார் மட்டம் பகுதியில், 'ஒன்றிணைவோம்;சமத்துவம் காண்போம்' தலைப்பில், விழிப்புணர்வு கருத்தரங்கு முகாம் நடந்தது.
நீலகிரி எஸ்.பி., நிஷா தலைமை வகித்தார்.
டி.எஸ்.பி.,கள் ரவி, சக்திவேல் மற்றும் கோத்தகிரி பேரூராட்சி தலைவர் ஜெயக்குமாரி ஆகியோர், முன்னிலை வகித்தனர்.
நிகழ்ச்சியில், மனித உரிமை, சமூக நீதி, தீண்டாமை, வன்கொடுமை சட்ட விதிகள் குறித்த விளக்கப்பட்டது. மேலும், போக்சோ தண்டனை மற்றும் கல்வியின் அவசியம், போக்குவரத்து விதிமீறல், சைபர் கிரைம் மற்றும் போதை பொருட்களின் தீமைகள் குறித்தும் பள்ளி மாணவர்கள் மற்றும் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தொடர்ந்து மனித உரிமை குறித்தான கலை நிகழ்ச்சி இடம்பெற்றது.
'நாவா' செயலாளர் ஆல்வாஸ், ஒருங்கிணைப்பாளர் முத்துசாமி, வக்கீல் முனிரத்தினம், புள்ளியியல் ஆய்வாளர் குணசீலன், எஸ்.ஐ.கள் நேரு, ஜான் மற்றும் கிருஷ்ணமூர்த்தி உட்பட பலர் பங்கேற்றனர்.