/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அணையில் முழு கொள்ளளவு: குடிநீர் தட்டுப்பாடுக்கு தீர்வு
/
அணையில் முழு கொள்ளளவு: குடிநீர் தட்டுப்பாடுக்கு தீர்வு
அணையில் முழு கொள்ளளவு: குடிநீர் தட்டுப்பாடுக்கு தீர்வு
அணையில் முழு கொள்ளளவு: குடிநீர் தட்டுப்பாடுக்கு தீர்வு
ADDED : மார் 18, 2025 09:30 PM

குன்னுார்:
குன்னுாரில், கொட்டி தீர்த்த கனமழையால், நகராட்சியின் குடிநீர் ஆதாரமான, ரேலியா அணை முழு கொள்ளளவை எட்டியது.
குன்னுாரில் கடந்த சில நாட்களாக அவ்வப்போது மழை பெய்கிறது. நேற்று முன்தினம் கன மழை கொட்டி தீர்த்தது. நீர்நிலைகளில், நீர்மட்டம் உயர்ந்தது. அதில், 43.6 அடி உயரம் கொண்ட, ரேலியா அணையில், 43.4 அடி வரை நீர் இருப்பு உயர்ந்தது. தொடர்ந்து, மழை நீடித்தால் முழு கொள்ளளவை எட்டி உபரி நீர் வெளியேறும் நிலை உள்ளது. இதனால், நகராட்சியின், 30 வார்டுகளுக்கும் குடிநீர் வழங்க, தண்ணீர் திறக்கப்பட்டது.
எமரால்டு கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வழங்கும் நிலையில், ரேலியா அணையில் இருந்தும் கூடுதலாக குடிநீர் வினியோகம் செய்வதால் மக்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத நிலை உள்ளது. இதேபோல, கோடை சீசனிலும் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாத வகையில் சேமித்து வைத்து, முறையாக வழங்க, நகராட்சி முடிவு செய்துள்ளது.