தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/ சொரனுார் அரசு தொழில்நுட்ப பள்ளி மாநில அளவிலான அறிவியல் போட்டி

சொரனுார் அரசு தொழில்நுட்ப பள்ளி மாநில அளவிலான அறிவியல் போட்டி

சொரனுார் அரசு தொழில்நுட்ப பள்ளி மாநில அளவிலான அறிவியல் போட்டி


ADDED : செப் 29, 2026 07:02 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 29, 2026 07:02 PM


Follow on Google
அ நிறம் | அளவு

பாலக்காடு: பாலக்காடு எம்.பி. ஸ்ரீகண்டன், சொரனூர் எம்.எல்.ஏ. மம்மிக்குட்டி ஆகியோர் நிருபர்களிடம் கூறியதாவது:

கேரள மாநிலம் முழுவதிலும் உள்ள, 39 தொழில்நுட்ப உயர்நிலைப்பள்ளிகள் மற்றும் மனிதவள வளர்ச்சி நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் செயல்படும், 9 தொழில்நுட்ப மேல்நிலைப் பள்ளிகளை சேர்ந்த மாணவ-, மாணவியர் இந்த போட்டியில் பங்கேற்று, தங்களது திறமைகளை வெளிப்படுத்த உள்ளனர்.

நேரடி போட்டிகள், இயங்கும் மாதிரிகள் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடக்கிறது. மேலும், 48 பள்ளிகளின் பிரத்யேக கண்காட்சி அரங்குகளும் பொதுமக்களின் பார்வைக்காக அமைக்கப்படுகின்றன.

அக்., 3ம் தேதி மாலை, 3:00 மணிக்கு நடக்கும் துவக்க விழாவில், உயர்கல்வித்துறை அமைச்சர் ரோஜி ஜான் போட்டியை துவக்கி வைக்கிறார். பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் துளசி விழாவுக்கு தலைமை வகிக்கிறார்.

அக். 4ம் தேதி மதியம் 1:00 மணிக்கு நிறைவு விழா மற்றும் பரிசளிப்பு நிகழ்ச்சி நடக்கிறது. பொதுக்கல்வித்துறை அமைச்சர் சம்சுதீன் பரிசு, சான்றிதழ்களை வழங்குகிறார்.

இவ்வாறு, அவர்கள் கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us