/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தென் மாநில தேயிலை ஏலம்; ரூ.40 கோடி வருவாய்
/
தென் மாநில தேயிலை ஏலம்; ரூ.40 கோடி வருவாய்
ADDED : ஜூன் 09, 2025 09:33 PM
குன்னூர்; தென் மாநில தேயிலை ஏல மையங்களில் நடந்த தேயிலை ஏலங்களில், 40 கோடி ரூபாய் மொத்த வருவாய் கிடைத்தது.
நீலகிரி மாவட்டம், குன்னூர் தேயிலை ஏல மையத்தில், கடந்த வாரம் நடந்த 23வது ஏலத்தில், 17.59 லட்சம் கிலோ இலை ரகம்; 5.56 லட்சம் கிலோ டஸ்ட் ரகம் என மொத்தம், 23.15 லட்சம் கிலோ ஏலத்திற்கு வந்தது.
14.14 லட்சம் கிலோ இலை ரகம்; 3.40 லட்சம் கிலோ டஸ்ட் ரகம் என மொத்தம், 17.54 லட்சம் கிலோ என, 75.77 சதவீதம் விற்றது. சராசரி விலை, கிலோவிற்கு, 103.61 ரூபாய் என இருந்தது; விலையில் ஒரு ரூபாய் சரிந்தது.
மொத்த வருமானம், 18.18 கோடி ரூபாய் கிடைத்தது. கடந்த ஏலத்தை விட, விலை வீழ்ச்சி மற்றும் விற்பனை சரிவால், 3.30 கோடி ரூபாய் மொத்த வருவாய் குறைந்தது.
நீலகிரி, கூட்டுறவு தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யும் தேயிலை தூள்கள், டீசர்வ் மையத்தில் ஏலம் விடப்பட்டது. இதில், 2.13 லட்சம் கிலோ வந்ததில், 1.95 லட்சம் கிலோ என, 91.40 சதவீதம் விற்றது.
கடந்த ஏலத்தை விட, வரத்து, சராசரி விலை, விற்பனை குறைந்தது.சராசரி விலை 89.17 ரூபாயாக இருந்தது; கிலோவிற்கு ஒரு ரூபாய் வீழ்ச்சி கண்டது. 1.73 கோடி ரூபாய் மொத்த வருவாய் கிடைத்தது. 19 லட்சம் ரூபாய் மொத்த வருவாய் குறைந்தது.
கோவை ஏல மையத்தில், இந்த ஏலத்தில், 5.39 லட்சம் கிலோ வந்ததில், 3.94 லட்சம் கிலோஎன 73.10 சதவீதம் விற்பனையானது. சராசரிவிலை ரூ.126.81 என இருந்தது; 5 கோடி ரூபாய் மொத்த வருவாய் கிடைத்தது. கொச்சி ஏல மையத்தில், 12.58 லட்சம் கிலோ வந்ததில், 9.84 லட்சம் கிலோ என, 78.21 சதவீதம் விற்றது. சராசரி விலை ரூ.155.71 என இருந்தது. 15.32 கோடி ரூபாய் மொத்த வருவாய்கிடைத்தது.
தொடர்ந்து வரத்து விற்பனை, விலையில் ஏற்றம் கண்ட நிலையில் தற்போது சரிவை நோக்கிசெல்கிறது.
தென் மாநில அளவில் 43.17 கோடி ரூபாய் மொத்த வருவாய் கிடைத்த நிலையில், கடந்த ஏலத்தை விட, 2.94 கோடி ரூபாய் மொத்த வருவாய்குறைந்தது.