/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தென்மாநில தேயிலை ஏலம்; ரூ. 34.21 கோடி மொத்த வருவாய்
/
தென்மாநில தேயிலை ஏலம்; ரூ. 34.21 கோடி மொத்த வருவாய்
தென்மாநில தேயிலை ஏலம்; ரூ. 34.21 கோடி மொத்த வருவாய்
தென்மாநில தேயிலை ஏலம்; ரூ. 34.21 கோடி மொத்த வருவாய்
ADDED : செப் 11, 2025 09:15 PM
குன்னுார்; தென் மாநில அளவில், தேயிலை ஏலங்களில் வரத்து மற்றும் விற்பனை சரிந்தது; ஏலங்களில், 34.21 கோடி ரூபாய் மொத்த வருவாய் கிடைத்தது.
'குன்னுார் தேயிலை ஏல மையத்தில் நடந்த, 35வது ஏலத்தில், 16.47 லட்சம் கிலோ இலை ரகம்; 4.03 லட்சம் கிலோ டஸ்ட் ரகம்,' என, மொத்தம், 20.50 லட்சம் கிலோ ஏலத்திற்கு வந்தது. '13.74 லட்சம் கிலோ இலை ரகம்; 3.40 லட்சம் கிலோ டஸ்ட் ரகம்,' என, மொத்தம், 17.14 லட்சம் கிலோ என 83.63 சதவீதம் விற்பனையானது. சராசரி விலை கிலோவிற்கு, 92.39 ரூபாய் என இருந்தது. மொத்த வருமானம், 15.84 கோடி ரூபாய் கிடைத்தது.
டீசர்வ் ஏலம் நீலகிரி மாவட்ட கூட்டுறவு தொழிற்சாலைகளில் உற்பத்தி செய்யும் தேயிலை துாள் ஏலம், டீசர்வ் ஏல மையத்தில் நடந்தது. 1.17 லட்சம் கிலோ ஏலத்துக்கு வந்ததில், 1.16 லட்சம் கிலோ விற்பனையாகியது.
சராசரி விலை கிலோவிற்கு, 84.39 ரூபாயாக இருந்தது; 98 ஆயிரம் ரூபாய் மொத்த வருவாய் கிடைத்தது. கோவை ஏல மையத்தில், நடந்த ஏலத்தில், 4.69 லட்சம் கிலோ வந்ததில், 4.21 லட்சம் கிலோ விற்பனையானது.
சராசரி விலை கிலோவிற்கு, 129.46 ரூபாயாக இருந்தது. 5.46 கோடி ரூபாய் மொத்த வருவாய் கிடைத்தது. கொச்சி ஏல மையத்துக்கு, 8.90 லட்சம் கிலோ வந்ததில், 7.49 லட்சம் கிலோ விற்பனையானது.
சராசரி விலை, 159.18 ரூபாய் என இருந்தது. 11.93 கோடி ரூபாய் மொத்த வருவாய் கிடைத்தது. தென் மாநில அளவில், 36.93 கோடி ரூபாய் மொத்த வருவாய் கிடைத்தது.