sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், பிப்ரவரி 23, 2026 ,மாசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

நீலகிரி

/

 தென்மாநில தேயிலை விலையில் ஏற்றம்

/

 தென்மாநில தேயிலை விலையில் ஏற்றம்

 தென்மாநில தேயிலை விலையில் ஏற்றம்

 தென்மாநில தேயிலை விலையில் ஏற்றம்


ADDED : பிப் 18, 2026 06:38 AM

Google News

ADDED : பிப் 18, 2026 06:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குன்னுார்: தென்மாநில அளவிலான, 6வது ஏலத்தில் தேயிலை வரத்து குறைந்தாலும், விற்பனை மற்றும் மொத்த வருவாய் அதிகரித்துள்ளது.

நீலகிரி மாவட்டம், குன்னுார் தேயிலை ஏல மையத்தில் நடந்த, 6வது ஏலத்தில், 8.62 லட்சம் கிலோ தேயிலை வந்ததில், 8.0 லட்சம் கிலோ (92.80 சதவீதம்) விற்பனையானது. சராசரி விலை கிலோவுக்கு, 116.34 ஆக இருந்தது. 9.31 கோடி ரூபாய் மொத்த வருவாய் கிடைத்தது.

டீசர்வ் ஏலம் ' டீசர்வ்' மையத்தில், 86 ஆயிரத்து 57 கிலோ ஏலத்துக்கு வந்ததில், 100 சதவீதம் விற்பனையாகியது. சராசரி விலை கிலோவுக்கு, 110 ரூபாய் 98 பைசா என இருந்தது. 95.51 லட்சம் ரூபாய் மொத்த வருவாய் கிடைத்தது.

கோவை மையத்தில் நடந்த ஏலத்தில், 3.61 லட்சம் கிலோ வரத்து இருந்த நிலையில், 3.20 லட்சம் கிலோ (88.59 சதவீதம்) என விற்றது.

சராசரி விலை கிலோவுக்கு, 158.91 ரூபாயாக இருந்தது. இதன் மொத்த வருவாய், 5.08 கோடி ரூபாயாகும்.

கொச்சி மையத்தில் நடந்த ஏலத்தில், 7.72 லட்சம் கிலோ வரத்து இருந்தது. 7.36 லட்சம் கிலோ (95.38 சதவீதம்) விற்றது.

சராசரி விலையாக கிலோவுக்கு, 182 ரூபாய் இருந்தது. இதன் மொத்த வருவாய் 13.41 கோடி ரூபாயாகும்.

மொத்த வருவாய் தென் மாநில அளவில் மொத்தமாக நடந்த, 6வது ஏலத்தில், 20 லட்சத்து 82 ஆயிரத்து 77 கிலோ வரத்து இருந்த நிலையில், 19 லட்சத்து 431 கிலோ (93.33 சதவீதம்) தேயிலை விற்பனையானது. மொத்த வருவாய் 28.76 கோடி ரூபாயாக இருந்தது.

கடந்த, 5வது ஏலத்தில், 21.72 லட்சம் கிலோ வரத்து இருந்த நிலையில், 18.99 லட்சம் கிலோ தேயிலை விற்பனையானது. மொத்த வருவாய், 28.72 கோடி ரூபாய் என இருந்தது.

இந்த ஏலத்தை ஒப்பிடுகையில், 6வது ஏலத்தில், தேயிலை வரத்து, 90 ஆயிரம் கிலோ குறைந்தது. எனினும், கடந்த வாரத்தை விட, 44,000 கிலோ அதிகமாக விற்பனை ஆகியது.

மொத்த வருவாயில் 4 லட்சம் ரூபாய் அதிகரித்துள்ளது.






      Dinamalar
      Follow us