/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
புதுமந்து போலீஸ் ஸ்டேஷனில் களவாடப்பட்ட உதிரி பாகங்கள்
/
புதுமந்து போலீஸ் ஸ்டேஷனில் களவாடப்பட்ட உதிரி பாகங்கள்
புதுமந்து போலீஸ் ஸ்டேஷனில் களவாடப்பட்ட உதிரி பாகங்கள்
புதுமந்து போலீஸ் ஸ்டேஷனில் களவாடப்பட்ட உதிரி பாகங்கள்
ADDED : ஜன 20, 2025 10:40 PM

ஊட்டி; ஊட்டி புதுமந்து போலீஸ் ஸ்டேஷன் வளாகத்தில் நிறுத்தப்பட்ட வாகனத்திலிருந்து உதிரி பாகங்கள் திருடப்பட்டுள்ளதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
ஊட்டி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த மனு நீதிநாள் கூட்டத்துக்கு வந்த, கோக்கால் கிராமத்தை சேர்ந்த நாகராஜ் கலெக்டரிடம் மனு அளித்த பின், நிருபர்களிடம் கூறியதாவது:
எனக்கு சொந்தமான 'பிக்-அப்' வாகனத்தில் சாராய ஊரல் வைத்திருப்பதாக கூறி, கடந்த, 2020ம் ஆண்டு ஏப்.,25ம் தேதி புதுமந்து போலீசார் வாகனத்தை பறிமுதல் செய்து போலீஸ் ஸ்டேஷனில் நிறுத்தினர்.
வழக்கு கோர்ட்டில் நடந்து வந்தது. ஏ.டி.எஸ்.பி., அலுவலகத்திலிருந்து, ஜன., 9ம் தேதி என்னை தொடர்பு கொண்டனர். நான் அங்கு சென்ற போது, வழக்கை திரும்பபெற்று கொண்டு, 17,110 ரூபாய் அலுவலகத்தில் கட்டி விட்டு வாகனத்தை எடுத்து செல்லுமாறு தெரிவித்தனர்.
நான் பணத்தை கட்டி வாகனத்தை எடுக்க சென்ற போது, வாகனத்திலிருந்த, 'கியர் பாக்ஸ்' உட்பட உதிரி பாகங்கள் அனைத்தும் களவாடப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தேன். போலீசாரிடம் கேட்ட போது முறையான பதில் கூறவில்லை. மாவட்ட எஸ்.பி., மற்றும் கலெக்டரிடம் புகார் கொடுத்துள்ளேன். அவர்கள் எனது வாகனத்தை முழுமையாக மீட்டு தருவார்கள் என எதிர்பார்க்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.
டி.எஸ்.பி., நவீன் கூறுகையில், ''இது குறித்து விசாரணை நடந்து வருகிறது. அதற்கு பின் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்,'' என்றார்.

