/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சோதனை சாவடிக்கு வரும் சிட்டு குருவிகள் ; தினமும் உணவு கொடுக்கும் வேட்டை தடுப்பு காவலர்
/
சோதனை சாவடிக்கு வரும் சிட்டு குருவிகள் ; தினமும் உணவு கொடுக்கும் வேட்டை தடுப்பு காவலர்
சோதனை சாவடிக்கு வரும் சிட்டு குருவிகள் ; தினமும் உணவு கொடுக்கும் வேட்டை தடுப்பு காவலர்
சோதனை சாவடிக்கு வரும் சிட்டு குருவிகள் ; தினமும் உணவு கொடுக்கும் வேட்டை தடுப்பு காவலர்
ADDED : மார் 19, 2025 08:11 PM

கூடலுார்; கூடலுார் நாடுகாணி வனச்சோதனை சாவடிக்கு வரும் சிட்டு குருவிகளுக்கு வேட்டை தடுப்பு காவலர் தினமும் உணவு, தண்ணீர் கொடுத்து வருகிறார்.
சிட்டு குருவிகளை பாதுகாக்கும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், ஆண்டுதோறும், மார்ச் மாதம், 20ல் உலக சிட்டு குருவி தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. சிட்டு குருவிகளை பாதுகாக்க, வீடுகளின் சுவற்றில் மண்சட்டி அல்லது அட்டை பெட்டி வைத்து, அதற்கான வாழ் விடத்தை உருவாக்கு வதால், குருவிகளை பாதுகாக்க முடியும். இந்நிலையில், கூடலுார் நாடுகாணி வன சோதனை சாவடியில் பணியாற்றி வரும் வேட்டை தடுப்பு காவலர் தருமன், சிட்டு குருவிகள் பாதுகாப்பதில் ஆர்வம் காட்டி வருகிறார்.
சோதனை சாவடி பணிக்கு வந்த போது, அங்கு நாள்தோறும் சிட்டு குருவிகள் வருவதை பார்த்துள்ளார். தொடர்ந்து, அருகே உள்ள ரேஷன் கடையில், சிறிது ரேஷன் அரிசி சேகரித்து துாவி உள்ளார். ஆனால், சிட்டு குருவி கள் அதனை உட்கொள்ள வில்லை.
அதன்பின், கடையி லிருந்து சிறுதானியமான திணை வாங்கி வந்து, வைத்த போது அதனை சிட்டு குருவிகள் ஆர்வமாக உண்ண துவங்கின.
தொடர்ந்து, சிட்டு குருவிகள் குடிக்க, தண்ணீர் வைத்ததுடன் நாள்தோறும், 'காலை, 9:00 மணி; மதியம், 1:30 மணி; மாலை, 5:30 மணி,' என மூன்று நேரம் தினை மற்றும் தண்ணீர் வைத்து வருகிறார். தற்போது, நாள்தோறும் நுாற்றுக்கும் மேற்பட்ட சிட்டு குருவிகள் வந்து, அவர் போடும் தினையை உட்கொண்டு, தண்ணீர் குடிப்பதை வழக்கமாக கொண்டுள்ளார்.
சோதனை சாவடி அருகே உள்ள, கடைகளில் கூடு கட்டி, வசிக்க துவங்கியுள்ளன. இவரின் முயற்சியால், அப்பகுதியில் சிட்டு குருவிகள் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால், பறவைகள் ஆர்வலர்கள்; மக்கள் தருமனுக்கு பாராட்டு தெரிவித்துள்ளனர்.