/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஓட்டுச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆய்வு
/
ஓட்டுச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆய்வு
ஓட்டுச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆய்வு
ஓட்டுச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம் வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ஆய்வு
ADDED : டிச 30, 2025 07:00 AM
கோத்தகிரி: கோத்தகிரி ஒரசோலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஓட்டுச்சாவடிகளில் நடந்த சிறப்பு முகாம் குறித்து ஆய்வு செய்யப்பட்டது.
நீலகிரி மாவட்டத்தில், 736 ஓட்டுச்சாவடி மையங்களில், வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தில், பட்டியலில் இடம் பெற வாக்காளர்களை பெயர் சேர்க்க, 27, 28ம் சிறப்பு முகாம் நடந்தது.
அதில், குன்னுார் சட்ட சபை தொகுதிக்கு உட்பட்ட ஒரசோலை, நல்லாயன் பள்ளிகளில் நடந்த, பெயர் சேர்த்தல், திருத்தம் உள்ளிட்ட பணிகளை, வாக்காளர் பட்டியல் பார்வையாளர் ரகுநாத், கலெக்டர் லட்சுமி பவ்யா முன்னிலையில் ஆய்வு செய்தார்.
அதில், 'மேப்பிங் செய்ய இயலாத நபர்களின் விவரங்களை கேட்டறிந்து, வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களிடம், தேர்தல் ஆணையம் தெரிவித்த விழிப்புணர்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும்,' என, தெரிவித்தார்.
மேலும், 'இணைய தளத்தின் மூலம், தங்களது பெயர் இருப்பதை மொபைல் வாயிலாக புரிந்து கொள்ளும் வகையில், விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
தவிர, ஒலி பெருக்கி வாயிலாக அறிவித்து, பட்டியலில் பெயர் சேர்க்க வேண்டும். மேலும், பழங்குடியினர் மற்றும் தோட்ட தொழிலாளர்களுக்கு நடந்து வரும் சிறப்பு முகாம்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவதுடன், ஓட்டுச்சாவடி நிலை அலுவலர்கள் தவறாமல் புகைப்படம் எடுத்துக்கொண்டு பி.எல்.ஓ., க்கள், ஏ.பி.பி., யில் பதிவு செய்ய வேண்டும்,' என, அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, கோத்தகிரி தாலுகா அலுவலகத்தில், சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பான ஆய்வு கூட்டத்தில் பங்கேற்றார். அதில், சப்-கலெக்டர் சங்கீதா மற்றும் தாசில்தார் ராஜேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

