ADDED : செப் 16, 2026 05:11 PM
அ நிறம் | அளவு
கோத்தகிரி: கோத்தகிரி பகுதியில், கால்கடைகளுக்கு சிறப்பு முகாம் நடந்தது.
தமிழ்நாடு அரசு கால்நடை பராமரிப்பு துறை, ஊட்டி உட்கோட்டம் சார்பில், சிறப்பு கால்நடை சுகாதாரம் மற்றும் விழிப்புணர்வு முகாம், மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது.
அதன்படி, நெடுகுளா அருகே உள்ள எஸ்.கைகாட்டி பகுதியில் முகாம் நடந்தது. கால்நடை மருத்துவர்கள் ஆடு, மாடு மற்றும் வளர்ப்பு நாய்களுக்கு சிகிச்சை அளித்து, தேவையான மருந்து மாத்திரை வழங்கினர். அதில், ஏராளமானோர் தங்களது கால்நடைகளுக்கு சிகிச்சை அளிக்க செய்தனர். நிகழ்ச்சியில், கால்நடைகளுக்கு வரும் நோய்கள் மற்றும் பாதுகாப்பு முறை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.
