/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம்
/
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் சிறப்பு முகாம்
ADDED : நவ 18, 2024 09:28 PM
கோத்தகிரி; கோத்தகிரி ஒரசோலை அரசு நடுநிலைப்பள்ளியில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் திருத்த முறை சிறப்பு முகாம் நடந்தது.
ஓட்டுச்சாவடி நியமன அலுவலர் தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் தலைமை வகித்தார். நிலை அலுவலர் மகேஷ் முன்னிலை வகித்தார். இதில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்தல் போன்ற பணிகள் நடைபெற்றன.
அரசியல் கட்சியினர் முன்னிலையில், கிராம நிர்வாக அலுவலர் ராஜ்கமல், பணிகளை பார்வையிட்டு, ஆலோசனை வழங்கினார். முகாமில், 25 படிவங்கள் பெறப்பட்டன. மாநில தேர்தல் ஆணையத்தின் ஆணைப்படி, 18 வயது நிரம்பிய அனைவரும் வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது.
இதே போல, கோத்தகிரி பகுதியில் உள்ள பல்வேறு ஓட்டுச்சாவடிகளிலும், சிறப்பு முகாம் நடந்தது. 'வரும் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் சிறப்பு முகாம் நடைபெறும்,' என, தெரிவிக்கப்பட்டது.