/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பழங்குடியின மக்களுக்கான சிறப்பு முகாம்
/
பழங்குடியின மக்களுக்கான சிறப்பு முகாம்
ADDED : ஜன 25, 2024 12:16 AM
பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையம் அருகே பாலமலையில் பழங்குடியின மக்களுக்கான சிறப்பு முகாம் நடந்தது.
பெரியநாயக்கன்பாளையம் அருகே நாயக்கன்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட பாலமலை வட்டாரத்தில் பெரும்பதி, பெருக்கை பதி, பெருக்கைப்பதிபுதூர், பசுமணி உள்ளிட்ட பழங்குடியின மக்கள் வாழும் மலை கிராமங்கள் உள்ளன. இங்கு வசிக்கும் பழங்குடியின மக்களுக்கான ஆதார் எண் அட்டை மாற்றம் மற்றும் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
இதில், பழங்குடியின மக்களுக்காக ஆதார் அட்டை இல்லாதவர்களுக்கு புதிய ஆதார் அட்டை எடுக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டன. மேலும், ஏற்கனவே ஆதார் அட்டை இருப்பவர்களுக்கு முகவரி மாற்றம், மொபைல் எண் மாற்றம் தொடர்பாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன.
மேலும், சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வருவாய்த் துறையினர் மற்றும் ஆதிதிராவிட நல துறையினர் செய்தனர்.
நிகழ்ச்சியில், வடக்கு மாவட்ட தலைமை இடத்து துணை வட்டாட்சியர் சத்யராஜ், பெரியநாயக்கன்பாளையம் வருவாய் ஆய்வாளர் சித்ரா, நாயக்கன்பாளையம் கிராம நிர்வாக அலுவலர் செந்தில், நாயக்கன்பாளையம் ஊராட்சி தலைவர் சாந்தி பிரியா சந்துரு ஜெகவி, துணை தலைவர் சின்னராஜ், வேளாண் அலுவலர்கள் வெள்ளிங்கிரி, ரமேஷ் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.