/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பழங்குடியினருக்கான சிறப்பு முகாம்; பெறப்பட்ட 120 மனுக்கள்
/
பழங்குடியினருக்கான சிறப்பு முகாம்; பெறப்பட்ட 120 மனுக்கள்
பழங்குடியினருக்கான சிறப்பு முகாம்; பெறப்பட்ட 120 மனுக்கள்
பழங்குடியினருக்கான சிறப்பு முகாம்; பெறப்பட்ட 120 மனுக்கள்
ADDED : ஜூன் 02, 2025 11:56 PM
கூடலுார்; கூடலுார், போஸ்பாரா பகுதியில் நடந்த பழங்குடியினருக்கான சிறப்பு முகாமில், 120 மனுக்கள் பெறப்பட்டது.
கூடலுார் போஸ்பாரா புனித ஜோசப் அரங்கில், வருவாய் துறை மற்றும் போலீஸ் துறை சார்பில் பழங்குடியினருக்கான சிறப்பு குறை தீர்க்கும் முகாம் நடந்தது.
முகாமுக்கு, துணை ஆட்சியர் சங்கீதா தலைமை விகித்து, பழங்குடியினருக்கான அரசு திட்டங்கள் குறித்து விளக்கினார். தொடர்ந்து பழங்குடியினரிடமிருந்து, 120 மனுக்கள் பெறப்பட்டது. மனுக்கள் மீது தீர்வு காண துறை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டது.
தொடர்ந்து செம்பக்கொல்லி, போஸ்பாரா, பீச்சனங்கொல்லி, பேபி நகர் பகுதி சாலைகள் மற்றும் பழங்குடியினர் வீடுகளை ஆய்வு மேற்கொண்டனர்.
டி.எஸ்.பி., வசந்தகுமார், தாசில்தார் முத்துமாரி, தேவர்சோலை பேரூராட்சி செயல் அலுவலர் பிரதீப், துணை தலைவர் யூனுஸ்பாபு மற்றும் அரசு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.