தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/சிறப்பு சமரச தீர்வு முகாம்: விழிப்புணர்வு நடை பயணம்

சிறப்பு சமரச தீர்வு முகாம்: விழிப்புணர்வு நடை பயணம்

சிறப்பு சமரச தீர்வு முகாம்: விழிப்புணர்வு நடை பயணம்


UPDATED : அக் 09, 2026 06:38 PM

ADDED : அக் 09, 2026 06:36 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 09, 2026 06:38 PM ADDED : அக் 09, 2026 06:36 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஊட்டி:

ஊட்டியில், ‘தேசத்திற்கான சமரசம் 3.0’ சிறப்பு சமரச தீர்வுக்கான, விழிப்புணர்வு நடைபயணம் நடந்தது.

நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை சமரசம் வாயிலாக தீர்வு காண, சுப்ரீம் கோர்ட் மற்றும் சென்னை ஐகோர்ட் உத்தரவுப்படி, கடந்த, 1 முதல், டிச., 31ம் தேதி வரை, சிறப்பு சமரச தீர்வு முகாம் நடக்கிறது.

அதில்,குடும்ப பிரச்னை, வாகன விபத்து இழப்பீடு, குடும்ப வன்முறை, காசோலை மோசடி, வர்த்தக பிரச்னை, பாகப்பிரிவினை, வாடகை தகராறு, வங்கி கடன், நில ஆர்ஜிதம், தொழிலாளர் வழக்கு மற்றும் சமரசமாக முடிக்க கூடிய உரிமைகள் குற்றவியல் வழக்குகளுக்கு தீர்வு காண முடியும்.

இதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக, நீலகிரி மாவட்ட சமரசத் தீர்வு மையம் சார்பில், 'தேசிய சமரத்தீர்வு 3.0' என்ற தலைப்பில், நடைப்பயணம் மேற்கொள்ளப்பட்டது.

ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா பகுதியில் இருந்து துவங்கிய நடை பயணம் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள பழைய கோர்ட் வரை நடந்தது.

அதில், மாவட்ட நீதிபதி முரளிதரன், குடும்ப நல நீதிபதி ஸ்ரீதர், முதன்மை குற்றவியல் நீதித்துறை நடுவர் மும்மூர்த்தி, சார்பு நீதிபதி வனிதா, நீதித்துறை நடுவர் ரவி, உரிமையியல் நீதிபதி பிரகாஷ் மற்றும் கூடுதல் நீதிதுறை நடுவர் சோழியா உட்பட, வக்கீல்கள் மற்றும் நீதிமன்ற ஊழியர்கள் பங்கேற்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us