/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
கோத்தகிரியில் நலம் காக்கும் சிறப்பு மருத்துவ முகாம்
/
கோத்தகிரியில் நலம் காக்கும் சிறப்பு மருத்துவ முகாம்
கோத்தகிரியில் நலம் காக்கும் சிறப்பு மருத்துவ முகாம்
கோத்தகிரியில் நலம் காக்கும் சிறப்பு மருத்துவ முகாம்
ADDED : ஆக 04, 2025 07:55 PM
கோத்தகிரி; கோத்தகிரி புனித அந்தோணியார் நடுநிலைப் பள்ளியில் நலம் காக்கும் ஸ்டாலின் சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.
முகாமை துவக்கி வைத்து, மருத்துவ பரிசோதனையை பார்வையிட்ட அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன் கூறியதாவது:
மாநில முதல்வர், மக்களின் பொருளாதார வளர்ச்சி, சமூக வளர்ச்சியை கருத்தில் கொண்டு, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். அதன்படி, நலம் காக்கும் ஸ்டாலின் என்ற திட்டம் துவக்கப்பட்டுள்ளது. இந்த மருத்துவ முகாம் மூலம், சிறப்பு மருத்துவ சேவைகள், புற்றுநோய் கண்டறிதல் பரிசோதனை, முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு அட்டை வழங்குதல், அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு அடையாள அட்டை வழங்குதல் மற்றும் ரத்தப் பரிசோதனை உள்ளடக்கிய கோப்பு வழங்கப்படுகிறது.
இதில், 17 சிறப்பு மருத்துவ சேவைகள் இலவசமாக வழங்கப்படுகிறது. மேல் சிகிச்சை தேவைப்படும் நோயாளிகள், ஊட்டி அரசு மருத்துவ கல்லுாரி மற்ற மருத்துமனைக்கு பரிந்துரைக்கப்படுவர். இது, ஏழை, எளிய மக்களுக்கு பயனுள்ளதாக உள்ளது. இவ்வாறு, அவர் கூறினார்.
தொடர்ந்து, மருத்துவம் மற்றும் ஓமியோபதி துறை, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் உள்ளிட்ட பல்வேறு அரங்குகளை பார்வையிட்டார்.
கோத்தகிரி நகராட்சி தலைவர் ஜெயக்குமாரி, துணைத் தலைவர் உமாநாத் மற்றும் தாசில்தார் ராஜேஸ்வரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

