/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாம்
/
வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த முகாம்
ADDED : ஜன 03, 2026 06:10 AM
ஊட்டி: வாக்காளர் பட்டியலில் பெயரை சேர்க்க, சிறப்பு தீவிர திருத்த முகாம் இன்று மற்றும் நாளையும் நடக்கிறது.
மாவட்ட தேர்தல் அலுவலர் கலெக்டர் லட்சுமி பவ்யா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு:
தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தல் படி, சிறப்பு தீவிர திருத்தம், 2026 கடந்த, நவ., 4ம் தேதி தொடங்கி நடந்து வருகிறது. மாவட்டத்தில் உள்ள, 736 ஓட்டுச்சாவடி மையங்களில், 3 மற்றும் 4ம் தேதிகளில் (சனி, ஞாயிறு) சிறப்பு முகாம்கள் நடக்கிறது. முகாம் நடக்கும் இரண்டு நாட் களில், 18 வயது பூர்த்தி அடைந்தவர்கள் தங்களது பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்து கொள்ள (படிவம்-6); இறந்தவர் மற்றும் இடம் பெயர்ந்த வாக்காளர்களின் பெயரை நீக்க (படிவம்-7) மற்றும் முகவரி திருத்தம் செய்ய (படிவம்-8) ஆகிய படிவங்களை பயன்படுத்த வேண்டும். சிறப்பு முகாம் நடைபெறும் நாட்களில் அனைத்து விவரங்களையும் சரியாக பூர்த்தி செய்து, படிவங்களை அளித்து இறுதி வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை தக்க வைத்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

