ADDED : செப் 04, 2026 07:41 PM
ஊட்டி: ஓவேலி, புஞ்சக்கொல்லி உயரழுத்த மின்பாதைகளில் சிறப்பு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால் இன்று மின் வினியோகம் இருக்காது.
நீலகிரி மின்பகிர்மான வட்ட கூடலூர் செயற்பொறியாளர் முத்துகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு; கூடலூர் துணை மின் நிலையத்திற்கு உட்பட்ட 11 கேவி ஓவேலி உயரழுத்த மின் பாதை மற்றும் சேரம்பாடி துணை மின் நிலையத்திற்கு. உட்பட்ட 11 கேவி புஞ்சக்கொல்லி உயரழுத்த மின் பாதை ஆகிய இரண்டு உயரழுத்த மின் பாதைகளில் இன்று சிறப்பு பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இந்த இரண்டு உயரழுத்த மின் பாதைகளில் இருந்து மின்சாரம் பெறும் பகுதிகளில் காலை, 10:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. எனவே, பொதுமக்கள் தகுந்த மாற்று ஏற்பாடுகளை செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகிறது. இவ்வாறு, அதில் கூறப்பட்டுள்ளது.
