/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
சேவை மேம்பட வேண்டும்!: இன்ஜின் பாதிப்பால் சிறப்பு மலை ரயில் ரத்து: ஊட்டிக்கு செல்ல வந்த பயணிகள் ஏமாற்றம்
/
சேவை மேம்பட வேண்டும்!: இன்ஜின் பாதிப்பால் சிறப்பு மலை ரயில் ரத்து: ஊட்டிக்கு செல்ல வந்த பயணிகள் ஏமாற்றம்
சேவை மேம்பட வேண்டும்!: இன்ஜின் பாதிப்பால் சிறப்பு மலை ரயில் ரத்து: ஊட்டிக்கு செல்ல வந்த பயணிகள் ஏமாற்றம்
சேவை மேம்பட வேண்டும்!: இன்ஜின் பாதிப்பால் சிறப்பு மலை ரயில் ரத்து: ஊட்டிக்கு செல்ல வந்த பயணிகள் ஏமாற்றம்
UPDATED : ஏப் 20, 2024 04:05 PM
ADDED : ஏப் 20, 2024 12:15 AM

நீலகிரி மாவட்டத்திற்கு கோடை சீசனுக்காக வரும் சுற்றுலா பயணிகள் மேட்டுப்பாளையம் முதல் ஊட்டி வரையிலான பாரம்பரிய அந்தஸ்து பெற்ற மலை ரயிலில் பயணம் செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து குன்னுாருக்கு தலா ஒரு முறையும், ஊட்டி-குன்னுார் இடையே தலா, 4 முறையும் மலை ரயில் இயக்கப்பட்ட வருகிறது.
நடப்பாண்டு வரும், 29ம் தேதி முதல் ஜூலை, 1ம் தேதி வரை, வாரந்தோறும் வெள்ளி முதல் திங்கட் கிழமை வரை, 4 நாட்களுக்கு சிறப்பு மலை ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
உலக பாரம்பரிய தினம்
நேற்று முன்தினம் உலக பாரம்பரிய தினம் கொண்டாடப்பட்ட நிலையில், 'யுனெஸ்கோ' அங்கீகாரம் கிடைத்த இந்த மலை ரயில் மேம்பாட்டுக்கு மத்திய அரசு அதிக அளவில் நிதி ஒதுக்கி மேம்படுத்தி வருகிறது. எனினும், மலை ரயில் நிலையங்களில் அடிப்படை தேவைகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.
அதே நேரத்தில், புதிதாக கொண்டுவரப்பட்டு மேட்டுப்பாளையத்தில் நிறுத்தப்பட்டுள்ள புதிய, பழைய நிலக்கரி இன்ஜின்கள் சரி செய்து இயக்காமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது.
ஏமாற்றம்
இந்நிலையில், மேட்டுப்பாளையத்தில் நேற்று காலை, 9:15 மணிக்கு புறப்பட வேண்டிய சிறப்பு மலை ரயில், இன்ஜின் கோளாறு காரணமாக நிறுத்தப்பட்டு, சுற்றுலாப் பயணிகளுக்கு கட்டணம் திரும்ப கொடுக்கப்பட்டது. இதனால் சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடைந்தனர்.
மலை ரயில் ரத அறக்கட்டளை நிறுவன தலைவர் நடராஜன் கூறுகையில், ''பாரம்பரியம் கொண்ட மலை ரயில் மேம்பாட்டிற்காக அதிக அளவில் பணம் செலவழிக்கப்பட்டு வருகிறது.
ஆனால், நிலக்கரி இன்ஜின்கள் பயன்படுத்தப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளது. உலக பாரம்பரிய தினம் கொண்டாடப்பட்ட நிலையில் உள்ளூர் மக்களுக்கு பாரம்பரிய மலை ரயிலில் பயணம் செய்ய முடியாத நிலை உள்ளது.
உள்ளூர் மக்களுக்காகஆதார் சான்றுடன் சாதாரண கட்டணத்தில் இயக்க தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வருகிறது. பாரம்பரிய சுற்றுலா மற்றும் நீராவி பாரம்பரிய சுற்றுலாமேம்பாடு நிறைவேற்றப்படாமல் உள்ளது.
சீசன் காலங்களில் சுற்றுலா பயணிகள் பயன் பெற ஸ்டேஷன்களில் சீசன் டிக்கெட் வழங்குவது அறிமுகம் செய்ய வேண்டும். ஹில்குரோவ் ஸ்டேஷனில் கழிப்பிட வசதி, கேண்டீன் வசதி ஏற்படுத்த வேண்டும்.
தற்போது, ஊட்டி குனனுார் மலை ரயில் நிலையங்கள் மேம்பாட்டுப் பணிகளை உரிய முறையில் பாரம்பாரியம் மாறாமல் விரைவாக முடிக்க வேண்டும்,'' என்றார்.

