/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பொங்கல் விடுமுறையில் ஊட்டிக்கு சிறப்பு மலை ரயில்
/
பொங்கல் விடுமுறையில் ஊட்டிக்கு சிறப்பு மலை ரயில்
ADDED : ஜன 01, 2025 10:17 PM

குன்னுார்:நீலகிரி மாவட்டம் குன்னுாரில் இருந்து ஊட்டிக்கும் ஊட்டியில் இருந்து குன்னுாருக்கும், மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கும் ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கும் மலை ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில்களில் பயணம் செய்ய சுற்றுலா பயணியர் ஆர்வம் காட்டுகின்றனர்.
விடுமுறை தினங்களில் கூட்டம் மேலும் அதிகரிப்பதால், கிறிஸ்துமஸ், புத்தாண்டு விடுமுறைக்காக 6 நாட்களாக இயக்கப்பட்டு வரும், சிறப்பு மலை ரயில்கள் நாளை 2ம் தேதி முடிவடைகிறது.
இதையடுத்து, பொங்கல் விடுமுறைக்காக வரும், ஜன., 16 முதல் 19ம் தேதி வரை, 4 நாட்களுக்கு சிறப்பு மலை ரயில்கள் இயக்கப்படுகின்றன. மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டிக்கு, 16, 18 தேதிகளில் காலை 9.10 மணிக்கும்; ஊட்டியில் இருந்து மேட்டுப்பாளையத்திற்கு 17, 19 தேதிகளில், காலை 11:25 மணிக்கும் சிறப்பு மலை ரயில்கள் இயக்கப்படுகின்றன.
குன்னுாரில் இருந்து ஊட்டிக்கு, 16 முதல் 19ம் தேதி வரை காலை 8:20 மணிக்கும்; ஊட்டியில் இருந்து குன்னுாருக்கு மாலை 4:45 மணி என 4 நாட்கள் சிறப்பு மலை ரயில் இயக்கப்படுகிறது. ரவுண்ட் டிரிப் ஜாய் டிரைன், ஊட்டி - கேத்தி இடையே காலை 9:45 மணி; காலை 11: 35 மணி; மாலை 3:00 மணி என, இதே 4 நாட்கள், 3 முறை சுற்று ரயில்களாக இயக்கப்படுகிறது.
இதற்கான முன்பதிவு நேற்று துவங்கியது.