ADDED : அக் 27, 2025 10:10 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஊட்டி: -நீலகிரி மாவட்ட தமிழ் தென்றல் கலைக்குழு மற்றும் ஊட்டி ஒய்.எம்.சி.ஏ., சார்பில், சிறப்பு பட்டிமன்றம் நடந்தது.
மாணவர்களின் எதிர்கால நல்வாழ்விற்கு துணை நிற்பது, 'பெற்றோர்களா ஆசிரியர்களா' என்ற தலைப்பில் நடந்த பட்டிமன்றத்தில், கவிஞர்கள் நீலமலை ஜே.பி., ஜெனித்தா, ரமேஷ், சந்திரசேகர், நடராஜ் மூர்த்தி, சித்ரா உமேஷ் ஆகியோர் பேசினர்.
பட்டிமன்ற நடுவராக கிருஷ்ணராஜ் வழி நடத்தினார். தொடர்ந்து, பஞ்சாபகேசன், டோமினிக், அசோக் குமார் மற்றும் ஸ்டேன்லி ஆகியோரின் இசை நிகழ்ச்சி அரங்கேற்றப்பட்டது.
மலைச்சாரல் கவியரங்க செயலாளர் பிரபு நன்றி கூறினார்.

