/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தீபாவளி பண்டிகை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜை
/
தீபாவளி பண்டிகை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜை
தீபாவளி பண்டிகை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜை
தீபாவளி பண்டிகை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜை
ADDED : நவ 01, 2024 09:53 PM

பந்தலுார் ; தீபாவளி பண்டிகையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது.
பந்தலுார் சுற்று வட்டார பகுதி மக்கள் பெரும்பாலானவர்கள், கேரளா மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பணி செய்து வருகின்றனர். தீபாவளி பண்டிகை என்பதால் அனைவரும் சொந்த ஊர் திரும்பியதால், பந்தலுார் சுற்றுவட்டார பகுதிகளில் மக்கள் நடமாட்டம் அதிகரித்து காணப்பட்டது.
மேலும், தீபாவளி பண்டிகை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
அதில், பொன்னானி மகாவிஷ்ணு கோவில்; உப்பட்டி செந்துார் முருகன் கோவில், பந்தலுார் முத்துார் பிள்ளை மாரியம்மன் கோவில், தேவாலா வேட்டைக்கொருமகன் கோவில், நெலாக்கோட்டை மாரியம்மன் கோவில் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது. இதில், அந்தந்த பகுதி பொதுமக்கள் புத்தாடை அணிந்து, குடும்பங்களுடன் சென்று வழிபட்டனர்.