/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
நீலகிரியில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை
/
நீலகிரியில் ரம்ஜான் பண்டிகை சிறப்பு தொழுகை
ADDED : மார் 31, 2025 09:39 PM

குன்னுார்; நீலகிரி மாவட்டத்தில் ரம்ஜான் பண்டிகையையொட்டி சிறப்பு தொழுகை நடந்தது.
குன்னுார் பெட்போர்டு பள்ளிவாசலில் இருந்து புறப்பட்ட இஸ்லாமியர் ஊர்வலம்,மோர்ஸ் கார்டன் அருகே ஈத்கா மைதானத்தை அடைந்தது. அங்கு, பெரிய பள்ளிவாசல் தலைமை இமாம் வசீம் அக்ரம் தலைமையில், ரம்ஜான் சிறப்பு தொழுகை நடந்தது.
அதில், பெட்போர்ட் பள்ளி வாசல் முப்தி முஜிபூர் ரஹ்மான் காசிமி, சின்ன பள்ளி வாசல் முப்தி வாசீம் ஹசனி, வெலிங்டன் பள்ளி வாசல் நிமதுல்லாஹ் தாவூதி, பர்லியார் இமாம் அப்துல் சாலம் யூசுபி, பாய்ஸ் கம்பெனி இமாம் கலீலுார் ரஹ்மான் பங்கேற்றனர்.
மேலும், அம்பிகாபுரம் பள்ளி வாசல் தவ்பீக் தாவூதி, ஓட்டுப்பட்டறை பள்ளி வாசல் முகமது மழாஹிரி, சேலாஸ் பள்ளி வாசல் மம்னுான் உலுாமி, கே.எம்.கே., நகர் பள்ளி வாசல் ஜாகாங்கீர் உலுாமி மற்றும் பள்ளிவாசல் நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.
தொழுகை நிறைவடைந்ததும் ஒருவருக்கொருவர் கட்டித்தழுவி ரம் ஜான் வாழ்த்துக்களை தெரிவித்து கொண்டனர். பின், தங்கள் முன்னோரின் அடக்க ஸ்தலங்களுக்கு சென்று பிரார்த்தனையில் ஈடுபட்டனர். தொடர்ந்து விருந்துடன் வழங்கி ரம்ஜான் பண்டிகையை சிறப்பாக கொண்டாடினர். இதேபோல, ஊட்டி, கோத்தகிரி, கூடலுார், பந்தலுார் உள்ளிட்ட பிற பகுதிகளிலும் ரம்ஜான் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது.