/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
பொன்னானி முத்துமாரியம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை

ADDED : ஜூலை 29, 2025 07:58 PM

பந்தலுார்; பந்தலுார் அருகே, பொன்னானி முத்துமாரியம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
பொன்னானி ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில் ஆடிப்பூரத்தை முன்னிட்டு காலை முதல் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன.
கோவில் கமிட்டி நிர்வாகம் மற்றும் பக்தர்கள் இணைந்து, அம்மனுக்கு பல்வேறு வகை உணவு மற்றும் பலகாரங்கள் படைத்து வளைகாப்பு நடத்தினர். தொடர்ந்து, அம்மனுக்கு வளையல் மாலை அணிவித்து, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.
முன்னதாக, அம்மனுக்கு சீர்வரிசை பொருட்களை ஊர்வலமாக பக்தர்கள் எடுத்து வந்தனர். அதற்கு கோவில் அர்ச்சகர் சண்முகம் சிறப்பு பூஜைகள் செய்தார்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டி நிர்வாகிகள் கண்ணா, சிவக்குமார், ரமேஷ், சேகர், துரை, தீபன், ஜெகன், விநாயகமூர்த்தி, பிரகாஷ் தலைமையிலான குழுவினர் மற்றும் மகளிர் அமைப்பினர் செய்திருந்தனர்.