/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மலையில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை கோலாகலம்; திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்
/
மலையில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை கோலாகலம்; திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்
மலையில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை கோலாகலம்; திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்
மலையில் ஆடி வெள்ளி சிறப்பு பூஜை கோலாகலம்; திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்
ADDED : ஆக 08, 2025 08:31 PM

ஊட்டி; நான்காவது ஆடி வெள்ளியை ஒட்டி அம்மன் கோவில்களில் நடந்த சிறப்பு பூஜைகளில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஆடி மாத வெள்ளி கிழமைகளில் அம்மனை தரிசித்தால், அற்புத பலன்கள் கைமேல் கிடைக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. மேலும், வெள்ளியன்று அம்பிகை வழிபாடு செய்தால் அனைத்து நன்மைகளும் கிடைக்கும் என்பது முன்னோர் வாக்கு.
இந்நிலையில், நடப்பாண்டுக்கான ஆடி வெள்ளி கடந்த மாதம், 18ம் தேதி துவங்கியது. நேற்று நான்காவது ஆடி வெள்ளி பிறந்தது. இதை தொடர்ந்து, மாவட்டத்தில் உள்ள அம்மன் கோவில்களில், ஆடி வெள்ளி பூஜைகள் சிறப்பாக நடந்தன. மாரியம்மன், காளியம்மனும் ஒரே இடத்தில் வீற்றிருக்கும், ஊட்டி மாரியம்மன் கோவிலில் நேற்று ஆடி வெள்ளியை ஒட்டி சிறப்பு பூஜை நடந்தது. அப்போது, ஊட்டி மாரியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
அதேபோல், முழு பவுர்ணமி தினமான நேற்று வரலட்சுமி விரதம் இருந்த பெண்களுக்கு வளையல், ஜாக்கெட், மஞ்சள் கயிறு வழங்கப்பட்டது. திருமணமான இளம்பெண்கள் மாங்கல்ய பாக்கியம் நீடிக்கவும், திருமணமாகாத இளம் பெண்கள், விரைவாக திருமணம் நடக்கவும் சிறப்பு பூஜை நடந்தது.ஊட்டி அடுத்த, மஞ்சூர் பஜாரில் உள்ள மாரியம்மன் கோவிலில் நேற்று காலை முதல் பெண்கள் குடும்பத்துடன் வந்து சாமி தரிசனம் செய்து பிரார்த்தனை செய்தனர்.
கோவிலுக்கு வந்த பக்தர்களுக்கு சுண்டல் மற்றும் பிரசாதம் வழங்கப்பட்டது. மதியம், 12:00 மணிக்கு உச்சிகால பூஜையும் மாலை,6:00 மற்றும், 8:00 மணிக்கு சிறப்பு பூஜை நடந்தது.
இதேபோல், பிங்கர் போஸ்ட் மசினி அம்மன் கோவில், முள்ளிக்கொரை சிக்கம்மன் கோவில், அக்ரஹாரம் பகுதியில் உள்ள துளிர் காத்த அம்மன் கோவில், காந்தள் மூவுலக அரசியம்மன் கோவில் உட்பட பல்வேறு கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் விமர்சையாக நடந்தது.