/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
மலை ரயிலில் உள்ளூர் மக்களுக்கு சிறப்பு திட்டம் அவசியம் மலை ரத அறக்கட்டளை வலியுறுத்தல்
/
மலை ரயிலில் உள்ளூர் மக்களுக்கு சிறப்பு திட்டம் அவசியம் மலை ரத அறக்கட்டளை வலியுறுத்தல்
மலை ரயிலில் உள்ளூர் மக்களுக்கு சிறப்பு திட்டம் அவசியம் மலை ரத அறக்கட்டளை வலியுறுத்தல்
மலை ரயிலில் உள்ளூர் மக்களுக்கு சிறப்பு திட்டம் அவசியம் மலை ரத அறக்கட்டளை வலியுறுத்தல்
ADDED : மார் 14, 2024 11:33 PM
குன்னுார்;'சுற்றுலா பயணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் மலை ரயிலில், உள்ளூர் மக்களுக்கும் பயன்படும் வகையில், திட்டங்கள் செயல்படுத்த வேண்டும்,' என, வலியுறுத்தப்பட்டுள்ளது.
ஊட்டி- குன்னுார் -மேட்டுப்பாளையம் இடையே இயக்கப்படும் மலை ரயில்களில், சுற்றுலா பயணிகள் பயணம் செய்ய ஆர்வம் காட்டுகின்றனர்.
பயணிகளை கூட்டத்தை அதிகரிக்கும் வகையில், மலை ரயிலை மேம்படுத்த, மத்திய அரசின் 'அம்ரித் பாரத்' திட்டத்தின் கீழ், ரயில் நிலையங்கள் பொலிவு படுத்தப்பட்டு வருகிறது. ரயில் பாதைகள் மாற்றப்பட்டு புதுப்பிக்கப்பட்டுள்ளது.
மலை ரயிலுக்காக புதிதாக நிலக்கரி, டீசல் இன்ஜின்கள், 27 பெட்டிகள் நம் நாட்டிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது.
சிறப்பு ரயில் இயக்கம்
வரும், 29ம் தேதி முதல் ஜூலை, 1ம் தேதி வரை வாரந்தோறும் வெள்ளி முதல் திங்கள் கிழமை வரை, 4 நாட்களுக்கு சிறப்பு மலை ரயில் இயக்கப்படுகிறது. அதே வேளையில் உள்ளூர் மக்களுக்கு கூடுதலாக மலை ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
மலை ரத அறக்கட்டளை அமைப்பின் நிறுவன தலைவர் நடராஜன் கூறுகையில், ''போதிய இன்ஜின்கள், பெட்டிகள் உள்ள நிலையில் தற்போது வார இறுதியில், 4 நாட்களில் மட்டுமே சிறப்பு மலை ரயில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.அனைத்து நாட்களிலும் சிறப்பு மலை ரயில் இக்க வேண்டும்.
மேலும், உள்ளூர் மக்களுக்கு குறைந்த கட்டணம் நிர்ணயம் செய்வது ; ஹில் குரோவ் ஸ்டேஷனில் ஒரு மகளிருக்கான கழிப்பிடம் மட்டுமே உள்ளதால் கூடுதலாக கட்டுவது; கேன்டீன் வசதி ஏற்படுத்துவது; வரும் ஜூன் மாதம் குன்னுார் ரயில் நிலைய, 125வது ஆண்டு விழாவை பிரம்மாண்ட விழாவாக கொண்டாடுவது உள்ளிட்ட மேம்பாடுகளை ரயில்வே நிர்வாகம் செயல்படுத்த வேண்டும். இது குறித்து ரயில்வே உயர் அலுவலகளிடமும் வலியுறுத்தப்படும்,'' என்றார்.

