ADDED : பிப் 06, 2025 08:36 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பந்தலுார்; பந்தலுார் அருகே உப்பட்டி பகுதியில் பிரசித்தி பெற்ற அருள்மிகு செந்துார் முருகன் கோவில் தைப்பூச திருவிழா கடந்த, 2-ம் தேதி முகூர்த்த கால் நடும் நிகழ்வுடன் துவங்கியது.
நேற்று மகா கணபதி ஹோமம் நடந்தது. செந்துார் முருகன் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கு அபிஷேகம் நடத்தப்பட்டதுடன் கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு, காப்பு கட்டுதல் நிகழ்ச்சியும் நடந்தது.
இன்று சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை பூஜைகள் மற்றும் துர்கா பூஜை நடைபெறுவதுடன், தொடர்ந்து, 12-ம் தேதி வரை சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் கமிட்டியினர் மற்றும் விழா குழுவினர் செய்துள்ளனர்.