/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி; ஆர்வமுள்ள வீரர்கள் 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம்
/
முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி; ஆர்வமுள்ள வீரர்கள் 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம்
முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி; ஆர்வமுள்ள வீரர்கள் 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம்
முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி; ஆர்வமுள்ள வீரர்கள் 'ஆன்லைனில்' விண்ணப்பிக்கலாம்
ADDED : ஜூலை 28, 2025 08:39 PM
ஊட்டி; முதல்வர் கோப்பைக்கான, மாவட்ட விளையாட்டு போட்டிகளில் பங்கேற்க விரும்பும் பள்ளி, கல்லுாரி மாணவர்கள் 'ஆன்லைனில்' பதிவு செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
நடப்பாண்டில் பல புதிய விளையாட்டுக்கள் சேர்க்கப்பட்டு, 'பள்ளி, கல்லுாரி மாணவ, மாணவிகள், மாற்று திறனாளிகள், பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்கள், என, 5 பிரிவுகளில் மாவட்ட அளவில் 53 வகையான போட்டி; மண்டல அளவில், 14 வகையான போட்டிகளும்,' என, மொத்தம், 67 வகையான போட்டிகள் ஆக., செப்., மாதங்களில் நடத்தப்பட உள்ளது.
பள்ளி பிரிவிலான போட்டி பள்ளி பிரிவில் பங்கேற்க, 19 வயதிற்குட்பட்ட மாணவ, மாணவிகள், 2007ம் ஆண்டு ஜன., 1 ம் தேதி அல்லது அதற்கு பின் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு படிப்பவராக இருக்க வேண்டும்.
கல்லுாரி பிரிவில் பங்கேற்க, 25 வயதிற்கு உட்பட்ட மாணவ, மாணவிகள், 2000ம் ஆண்டு ஜூலை 1ம் தேதி அல்லது அதற்கு பின் பிறந்தவர்களாக இருக்க வேண்டும். மாற்று திறனாளிகள் பிரிவு, அரசு ஊழியர்கள் பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை.
பொதுப்பிரிவினர், 15 வயது முதல் 35 வயது வரை, 1990ம் ஆண்டு ஜன., 1 ம் தேதி அல்லது அதற்கு பின் பிறந்தவராகவும், 15 வயது எனில், 2010 ம் ஆண்டு ஜன., 1 ம் தேதி அல்லது அதற்கு முன் பிறந்தவர்களாகவும் இருக்க வேண்டும்.
முன்பதிவு தேதி அறிவிப்பு போட்டிகளில் பங்கேற்க முன்பதிவு செய்ய கடைசி நாள் ஆக., 16ம் தேதியாகும். போட்டியில் பங்கேற்பவர்கள், தவறாமல், https://cmtrophy.sdat.in மற்றும் https://sdat.tn.gov.in என்ற முகவரியில், குழு மற்றும் தனிநபர்களின் அனைத்து விவரங்களை முன்பதிவு செய்ய வேண்டும். நேரில் வரும் விண்ணப்பங்கள் ஏற்று கொள்ளப்பட மாட்டாது.
மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அலுவலர் இந்திரா கூறுகையில், ''முதல்வர் கோப்பைக்கான விளையாட்டு போட்டியில் பிற விபரங்கள் தேவைப்படும் பட்சத்தில், ஊட்டி எஸ்.ஏ.டி.பி., மைதானத்தில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தை நேரில் அணுகலாம்,'' என்றார்.