/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஊட்டியில் விளையாட்டு போட்டி; பழங்குடியின மாணவர்கள் அசத்தல்
/
ஊட்டியில் விளையாட்டு போட்டி; பழங்குடியின மாணவர்கள் அசத்தல்
ஊட்டியில் விளையாட்டு போட்டி; பழங்குடியின மாணவர்கள் அசத்தல்
ஊட்டியில் விளையாட்டு போட்டி; பழங்குடியின மாணவர்கள் அசத்தல்
ADDED : ஆக 14, 2025 08:06 PM
ஊட்டி; நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவ, மாணவிகளுக்கான விளையாட்டு போட்டிகள், ஊட்டி எச்.ஏ.டி.பி., திறந்த வெளி மைதானத்தில் நடந்தது.
குறு வட்ட அளவிலான தடகள போட்டி, வாலிபால் போட்டி, ஈட்டி, குண்டு எறிதல், வட்டு எறிதல் உள்ளிட்ட போட்டிகளில், 2000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பங்கேற்று விளையாடினர். குறிப்பாக, பழங்குடியின மாணவ, மாணவிகள் அனைத்து போட்டிகளிலும் பங்கேற்று தங்கள் திறமைகளை வெளிப்படுத்தினர்.
பள்ளிகள் அளவிலான விளையாட்டு போட்டியில், கூடலுார் அரசு பள்ளியை சேர்ந்த மாணவிகள், மாணவர்கள் கோப்பையை வென்றனர். இவர்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் இந்திரா உட்பட பலர் பாராட்டு தெரிவித்தனர்.