/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள்
/
அரசு பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு உபகரணங்கள்
ADDED : ஜூலை 06, 2025 10:36 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோத்தகிரி; பள்ளி தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் தலைமையில்,  கோத்தகிரி ஜே.சி.ஐ., தலைவர் விவேக் பொன்தோஸ் மாணவர்களுக்கு, கேரம் பலகை, செஸ் பலகை, பாட்மிண்டன் மற்றும் டெனிகாய்ட் உள்ளிட்ட, 6000 ரூபாய் மதிப்பிலான விளையாட்டு உபகரணங்கள் வழங்கி பேசுகையில்,''பள்ளியில் கல்வி இணை செயல்பாடுகளில் ஒன்றான விளையாட்டு போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு, சுறுசுறுப்பு, உழைப்பு, முயற்சி, ஊக்கம் தன்னம்பிக்கை வேண்டும். படிப்பிலும் கவனம் செலுத்தி உயர்ந்த லட்சியத்தை அடைய வேண்டும்,'' என்றார்.
நிகழ்ச்சியில், பள்ளி ஆசிரியர்கள் கமலா, லிடியா மற்றும் சிறப்பு ஆசிரியர் மீனா உட்பட மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.

