/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
தவறி விழுந்த புள்ளிமான் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
/
தவறி விழுந்த புள்ளிமான் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
தவறி விழுந்த புள்ளிமான் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
தவறி விழுந்த புள்ளிமான் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு
ADDED : ஜூலை 31, 2025 09:24 PM
குன்னுார்: குன்னுார் டானிங்டன் பிரிட்ஜ் அருகே, தவறி விழுந்து காயமடைந்த புள்ளிமானுக்கு சிகிச்சை அளித்தும் பயனில்லாமல் உயிரிழந்தது.
குன்னுார் டானிங்டன் பிரிட்ஜ் பகுதியில் காயத்துடன் உலா வந்த புள்ளிமான் குறித்து அப்பகுதி மக்கள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர். அங்கு சென்ற வனத்துறையினர் புள்ளிமானை மீட்டனர். கால்நடை டாக்டர் பார்த்தசாரதி சிகிச்சை அளித்தார். எனினும், சிகிச்சை பலனின்றி புள்ளிமான் உயிரிழந்தது. தொடர்ந்து சிம்ஸ்பார்க் அருகே, வனப்பகுதியில் புதைக்கப்பட்டது.
ரேஞ்சர் ரவீந்திரநாத் கூறுகையில்,''இங்குள்ள, தனியார் கெஸ்ட் ஹவுஸ் பகுதியில் மேற்பகுதியில் இருந்து கீழே விழுந்து காயம் அடைந்த இந்த பெண் புள்ளிமானுக்கு ஒன்றரை வயது இருக்கும்,'' என்றார்.