/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
காய்கறி தோட்டத்திற்க்கு 'ஸ்பிரிங்ளர்' தண்ணீர்
/
காய்கறி தோட்டத்திற்க்கு 'ஸ்பிரிங்ளர்' தண்ணீர்
ADDED : செப் 16, 2025 09:48 PM
கோத்தகிரி;கோத்தகிரி பகுதியில் வறட்சி காரணமாக, 'ஸ்பிரிங்ளர்' வாயிலாக, காய்கறி தோட்டங்களுக்கு விவசாயிகள் தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.
கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில், மலை காய்கறி அதிக பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ளது. இதில், பனி தாக்கினாலும் பாதிக்காத, கேரட் கணிசமான பரப்பளவில் பயிரிட்டு விவசாயிகள் பராமரித்து வருகின்றனர்.
கோத்தகிரி சுற்றுவட்டார பகுதிகளில், ஒரு மாதத்திற்கு மேலாக, மழை பெய்யாமல், கடந்த இரு நாட்களாக, வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதனால், காய்கறி தோட்டங்களில் ஈரத்தன்மை குறைந்து பயிர்கள் வாட்டம் கண்டுள்ளன. நீர் ஆதாரங்களிலும் தண்ணீர் வரத்து குறைந்து வருகிறது. விவசாயிகள் மழையை எதிர்பார்த்து காத்து கிடக்கின்றனர்.
பயிரை பாதுகாக்க ஏதுவாக, விவசாயிகள் ஓடைகளை மறித்து, இரவு நேரங்களில் சிறுக, சிறுக சேகரமாகும் தண்ணீரை, ஸ்பிரிங்ளர் வாயிலாக, பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர்.