/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஸ்ரீ ஆயிரங்கண் மாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம்
/
ஸ்ரீ ஆயிரங்கண் மாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம்
ஸ்ரீ ஆயிரங்கண் மாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம்
ஸ்ரீ ஆயிரங்கண் மாரியம்மன் திருக்கோவில் கும்பாபிஷேகம்
ADDED : ஜூன் 02, 2025 11:53 PM
கோத்தகிரி; கோத்தகிரி கேர்கம்பை அருள்மிகு ஸ்ரீ ஆயிரங்கண் மாரியம்மன் திருக்கோவிலில், மகா கும்பாபிஷேகம் நடந்தது.
கோத்தகிரி கேர்கம்பை கிராமத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ ஆயிரங்கண் மாரியம்மன் திருக்கோயில், புனரமைப்பு பணி கடந்த சில நாட்களாக நடந்து வந்தது. பணி முழுமை பெற்ற நிலையில், அம்மன் சிலையை கருவறையில் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது.
நேற்று முன்தினம் அதிகாலை, 5:00 மணிக்கு, சிங்க வாகனம் மற்றும் பலி பீடத்திற்கு பிரதிருஷ்டை செய்யப்பட்டது. தொடர்ந்து, காலை, 7:30 மணிமுதல் 9:00 மணிவரை, அருள்மிகு ஸ்ரீ ஆயிரங்கண் மாரியம்மன் திருவேள்வி பூஜையும், தொடர்ந்து, 10:30 மணிவரை,
குன்னுார் எடப்பள்ளி மல்லையா சுவாமி சற்குரு அடியார் தலைமையில், கோபுர கலசங்களுக்கு நன்னீராட்டு மற்றும் மகா கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து, துானேரி ராஜ்குமார் குழுவினரின் பஜனையும், ஊர் மக்களின் ஆடல், பாடல் நிகழ்ச்சியும் இடம் பெற்றது.
விழாவில், மாவடத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை, ஊர் தலைவர் போஜன் தலைமையில், கோவில் கமிட்டியினர், விழா குழுவினர் செய்திருந்தனர்.