/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஸ்ரீ ஹனுமன் ஜெயந்தி மஹோற்சவம் கோலாகலம்
/
ஸ்ரீ ஹனுமன் ஜெயந்தி மஹோற்சவம் கோலாகலம்
ADDED : டிச 31, 2024 06:58 AM

ஊட்டி : ஊட்டி ஆஞ்சநேயர் கோவிலில் ஸ்ரீ ஹனுமன் ஜெயந்தி மஹோற்சவ திருவிழாவின் நிறைவு விழாவில் நடந்த திருவீதி புறப்பாடு நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.
ஊட்டியில் உள்ள அருள்மிகு ஆஞ்சநேயர் திருக்கோவிலில் ஸ்ரீ ஹனுமன் ஜெயந்தி மஹோற்சவ திருவிழாவை ஒட்டி கடந்த, 9 நாட்கள் பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது.
அதில், உற்சவ ஆரம்பம், மஹா சுதர்சன ஹோமம், வாழைப்பழம் அலங்காரம், வெற்றிலை மாலை, விசேஷ அலங்காரம், கனி அலங்காரம், சந்தனகாப்பு அலங்காரம், வெண்ணெய் காப்பு அலங்காரம், உலர் பழங்கள் அலங்காரம் நடந்தது.
நேற்று முன்தினம் காலை, 9:00 மணியளவில் விசேஷ ஹோமம், சிறப்பு பூஜை நடந்தது.
தொடர்ந்து, அலங்கார திருமஞ்சனம், விசேஷ அலங்கார பூஜை நடந்தது. நேற்று காலை, 6:30 மணிக்கு ஹனுமன் ஜெயந்தி, ராஜ அலங்காரத்தை தொடர்ந்து, 3:00 மணிக்கு திருவீதி புறப்பாடு நிகழ்ச்சி நடந்தது. அதில், சிறப்பு அலங்காரத்தில் ஹனுமன் அருள்பாலித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்றனர். அனுஷியம் ஆன்மிக அறக்கட்டளை சார்பில் அன்னதானம் நிகழ்ச்சி நடந்தது.
வடை மாலை அலங்காரம்
மசினகுடி ஸ்ரீராம ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று முன்தினம் மாலை, 6:00 மணிக்கு தீபம் ஏற்றும் நிகழ்ச்சி; 6:30 மணிக்கு ராம நாம வேள்வி நிகழ்ச்சி நடந்தது. நேற்று காலை, 5:00 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 5:15 மணிக்கு தீபம் ஏற்றுதல், 6:00 மணிக்கு கணபதி ஹோமம், தொடர்ந்து அபிஷேகம், அலங்காரம், வெண்ணெய் சாற்றுதல், மகா தீபாராதனை, நடந்தது. 11:00 மணிக்கு வட மாலை சாற்றுதல் நிகழ்ச்சியும் நடந்தது. மாலை 6:00 மணிக்கு தீபம் ஏற்றுதல் நிகழ்ச்சியும், தொடர்ந்து தேர் ஊர்வலம் நடந்தது.
* கூடலுார் தேவர்சோலை சாலை மரத்தடி ஸ்ரீ கணபதி ஆலயம், வி.எச்.பி., சார்பில் ஆஞ்சநேயர் ஜெயந்தி முன்னிட்டு பஜனை நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, விநாயகர் கோவிலில் பஜனை, சிறப்பு பூஜைகள் நடந்தது. விழாவில் கர்நாடகா ஸ்ரீரங்கப்பட்டினம் ஆதிசங்கர் மடத்தை சேர்ந்த சுவாமி ஸ்ரீ கணேஷ்வரூபானந்தா சிரி, வி.எச்.பி., நகர தலைவர் ராகுல் ராமு, மாவட்ட துணை தலைவர் சசி, இணை செயலாளர் ஆனந்தன், பொருளாளர் கிருஷ்ணதாஸ் மற்றும் திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.