/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழா சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா

ADDED : ஏப் 27, 2025 09:14 PM

கோத்தகிரி : கோத்தகிரி அருள்மிகு ஸ்ரீ மாரியம்மன் கோவில் திருவிழாவில் அம்மன் சிம்ம வாகனத்தில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.
கோத்தகிரி கடைவீதி மாரியம்மன் கோவில் வருடாந்திர திருவிழா, கடந்த, 17ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கி நடந்து வருகிறது. கோத்தகிரி பகுதியை சேர்ந்த பல்வேறு உபயதாரர்கள் சார்பில், அம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார மலர் பூஜையும் பகல், 1:00 மணிக்கு அன்னதானமும் நடந்து வருகிறது. இவ்விழாவின், 8வது நாளாக நேற்று மாலை, 6:00 மணிக்கு அம்மனுக்கு மலர் அலங்கார வழிபாடு நடந்தது.
மாலை, 4:00 மணிக்கு, ஸ்ரீ ராமலிங்க சவுண்டாம்பிகை மற்றும் தேவங்கர் சமூகத்தினரின் கத்தி போடும் நிகழ்ச்சி நடந்தது. தொடர்ந்து, அம்மன் சிம்ம வாகனத்தில் எழுந்தருளி, திருக்கோவிலில் இருந்து நகரில் முக்கிய வீதிகள் வழியாக, திருவீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலித்தார். திரளான பக்தர்கள் பங்கேற்று அம்மனை வழி பட்டனர். விழா ஏற்பாடுகளை, கோவில் கமிட்டியினர், மகளிர் மன்றத்தினர் மற்றும் விழா குழுவினர் செய்திருந்தனர்.