/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய தேர் திருவிழா
/
புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய தேர் திருவிழா
ADDED : டிச 09, 2024 09:37 PM

பந்தலுார்; பந்தலுார் புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய தேர்திருவிழா கடந்த, 1- ஆம் தேதி, ஊட்டி மறை மாவட்ட முதன்மை குரு கிறிஸ்டோபர் லாரன்ஸ் தலைமையில் கொடி ஏற்றத்துடன் துவங்கியது.
தொடர்ந்து, தினசரி மாலை, 5:00 மணிக்கு மறையுரை திருப்பலி நடந்தது. திருவிழா நாளில், ஊட்டி மறை மாவட்ட ஆயர் அமல்ராஜூக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து, சிறப்பு பிரார்த்தனை; குழந்தைகளுக்கு புது நன்மை; உறுதி பூசுதல்; திருவருட் சாதனங்கள் வழங்கும் நிகழ்ச்சி இடம்பெற்றது. மாலையில் மலையாள வழி திருப்பலி நடந்தது. அதை தொடர்ந்து, தேர் பவனி இடம்பெற்றது.
சிறப்பு பிரார்த்தனை மற்றும் ஊர்வலத்தில் பங்கு மக்கள் மற்றும் திரளான பொதுமக்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பங்குத்தந்தை, பங்கு மக்கள் செய்திருந்தனர்.