/
உள்ளூர் செய்திகள்
/
நீலகிரி
/
உங்களுடன் ஸ்டாலின் முகாம்; விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுரை
/
உங்களுடன் ஸ்டாலின் முகாம்; விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுரை
உங்களுடன் ஸ்டாலின் முகாம்; விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுரை
உங்களுடன் ஸ்டாலின் முகாம்; விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுரை
ADDED : ஆக 01, 2025 07:42 PM
குன்னுார்; குன்னுார் பர்லியார் ஊராட்சிக்கு உட்பட்ட காட்டேரி அரசு விதை பண்ணையில், 'உங்களுடன் ஸ்டாலின்' திட்ட முகாம் நடந்தது.
அரசு தலைமை கொறடா ராமச்சந்திரன், மாவட்ட கலெக்டர் லட்சுமி பவ்யா ஆகியோர், மக்கள் நல்வாழ்வுத்துறையின் சார்பில் பொதுமக்களுக்கு பரிசோதனை செய்யப்படும் பணிகள், மனுக்கள் பதிவு செய்வது உள்ளிட்ட பணிகளை ஆய்வு மேற்கொண்டனர்.
முகாமில்,'பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை பதிவு செய்து, அரசுத்துறை அலுவலர்கள், பரிசீலனை செய்து, 45 நாட்களுக்குள் தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,' என, அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.
குன்னுார் கூடுதல் கலெக்டர் சங்கீதா, ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பீட்டர் ஞானராஜ், தாசில்தார்கள் ஜவகர், காயத்ரி (சமூக பாதுகாப்பு திட்டம்), வட்டார வளர்ச்சி அலுவலர்கள் விஜயா, ஜெய்சங்கர், தோட்டக்கலை துறை துணை இயக்குனர் ஜெயலட்சுமி உட்பட பலர் பங்கேற்றனர்.