ADDED : செப் 22, 2026 06:35 PM
அ நிறம் | அளவு
கோத்தகிரி: கோத்தகிரி தும்மனட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில், காமராஜர் காலை உணவு திட்டம் துவக்க விழா நடந்தது.
பள்ளி தலைமை ஆசிரியர் பார்வதி தலைமை வகித்தார். வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்ரீதர் மற்றும் சந்திரசேகர் ஆகியோர், முன்னிலை வகித்தனர். ஊட்டி எம்.எல்.ஏ.,போஜராஜன் சிறப்பு விருந்தினராக பங்கேற்று, காலை உணவு திட்டத்தை துவக்கி வைத்து, மாணவர்களுடன் அமர்ந்து, உணவு உட்கொண்டார்.
நிகழ்ச்சியில், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமச்சந்திரன், பள்ளி மேலாண்மை குழு தலைவர் கவுசல்யா, தும்மனட்டி கிராம தலைவர் நடராஜ், 14 ஊர் தலைவர்கள் உட்பட, பலர் பங்கேற்றனர். ஆசிரியர் சீனிவாசன் நன்றி கூறினார்.
